ஸ்மார்ட் டிவி வாங்கும் முன் நாம் பார்க்க வேண்டிய விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 


1. டிவியின் டிஸ்ப்ளே 
2. ஸ்கிரீன் சைஸ் 
3. ஸ்கிரீன் ரிசோலிசன் 
4. ரெப்ரெஷ் ரேட்
5. சவுண்ட் 
6. விலை 


1. டிவியின் டிஸ்ப்ளே 


ஸ்கிரீன்தான் டிவிக்கு பிரதானம். அதனால் அதில் மிகுந்த கவனம் அவசியம். ஸ்கிரீனை பொறுத்தவரையில் தற்போது நிறைய டெக்னாலாஜிக்கள் வந்துவிட்டன. அதில் பிளாஸ்மா அல்லது எல்சிடியை தேர்ந்தெடுக்கலாம். இதை தவிர்த்து LED, QLED, OLED உள்ளிட்ட பல டெக்னாலாஜிக்கள் உள்ளன. ஆனால் இதில் சரியானவற்றை தேர்வு செய்து வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் இருக்கிறது. அதனால் அதில் கவனம் தேவை. 


 




தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா 


 


2.ஸ்கிரீன் சைஸ்.


அதிக விலை கொடுத்து டிவி வாங்குபவாராய் இருந்தால் டிவியின் சைஸ் விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சைஸ் விஷயத்தை பொருத்தவரை, உங்கள் வீட்டில் டிவி அமைக்க இருக்கும் இடம், மற்றும் வீட்டில் உள்ள நபர்களை கண்க்கில் வைத்து நீங்கள் டிவியை தேர்ந்தெடுக்க வேண்டும். டிவியின் சைஸ் விஷயத்தில், நீங்கள் ஸ்கிரீனுக்கு எவ்வளவு நெருக்கத்தில அமர்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. ஹெச்டி குவாலிட்டி டிவி என்றால்  நீங்கள் அமரும் இடம், டிவியிலிருந்து டிவியின் உயரத்திற்கு மூன்று மடங்காக இருக்க வேண்டும்.   


3.ஸ்கிரீன் ரிசோலிசன் 


ரிசோலிசன் என்பது காட்சிகளை ஸ்கிரீனில் காண்பிக்க, எவ்வளவு பிக்சல்கள் தேவைப்படுகிறது என்பதை குறிக்கும். எவ்வளவு பிக்சல்கள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காட்சிகள் தெளிவாக இருக்கும். இதில் ஹெச்.டி, 4 கே, 8 கே என பல குவாலிட்டிகள் இருக்கின்றன. உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் நீங்கள் டிவியை தேர்ந்தெடுக்கலாம். 


4.ரெப்ரெஷ் ரேட்: 


ரெப்ரெஷ் ரேட்டை Hertz யை கொண்டு அளவிடுவர். 60 Hz ரெப்ரெஷ் ரேட் என்பது இயல்பான ஒன்று. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் 60 Hz ரெப்ரெஷ் ரேட்டில், வேகமாக நகரும் பொருட்களை கொண்ட காட்சிகளில், காட்சிகள் மங்கலாக தெரியும். அதனால் 120 Hz ரெப்ரெஷ் ரேட்டை கொண்ட டிவிக்களையோ அல்லது அதற்கு மேல் குவாலிட்டி கொண்ட டிவிக்களை தேர்வு செய்வது நல்லது. 


5.சவுண்ட்


சவுண்டை பொருத்தவரை உங்களது வீட்டின் இருப்பிடத்தை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது வீடு விசாலாமான வீடு என்றால், அதற்கேற்றார் போல சவுண்டை கொடுக்கும் டிவியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். டிவியை வாங்கும் போதே, சில ஆக்‌ஷன் சீன்களை வைத்து,  சவுண்டை அட்ஜெட்ஸ் செய்து, அந்த காட்சிகளுக்கு டிவி எப்படி சவுண்டை கொடுக்கிறது என்பதை செக் செய்து டிவியை தேர்ந்தெடுக்க வேண்டும். 


6.விலை 


விலையை பொருத்தவரை அது உங்கள் தேர்வுதான்.