இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது பிராண்ட் டிவிக்களை இறக்குமதி செய்துள்ளது. அந்த வகையில் இந்த நிறுவனம், கடந்த வாரம் புதிய X 3 சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்களை லான்ஞ் செய்ய உள்ளதாக கூறியது. இந்த ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் மற்றும் 40 இன்ச் ஆகிய இரண்டு விதமான அளவுகளில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட    X1 TV சிரீஸை தொடர்ந்து இந்த சிரீஸ்  X3 TV சிரீஸ் சந்தைக்கு வந்திருக்கிறது. இந்த டிவிக்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவில் லான்ஞ் ஆக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 


 



                                                         




X1 TV சிரீஸ் பற்றி மக்களுக்கு நன்றாக தெரிந்து விட்டதால்,  X2 TV சிரீஸ் வெளியிடுவதற்கு பதிலாக இந்த X3  சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் டிவிக்களில் 32 இன்ச் டிவி 20,000 ரூபாய்க்கு கீழாகவும், 40 இன்ச் டிவி 30,000 ரூபாய்க்கு கீழாகவும் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  X1 TV சிரீஸில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி 12,999 ரூபாய்க்கும், 40 இன்ச் டிவி  17,999 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


X3 சீரிஸில் 32 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் ஸ்மார்ட் டிவி ஹெச்.டி. ரிசோலிசனுடனும், 40 இன்ச்  டிஸ்ப்ளேவுடன் வரும் ஸ்மார்ட் டிவி ஃபுல் ஹெச்.டி. ரிசோலிசனுடனும் கிடைக்கிறது. NTSC color gamut டிஸ்ப்ளேவை உள்ளடக்கியுள்ள இந்த ஸ்மார்ட் டிவி, HDR10 மற்றும் HLG ஃபார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 



                                                     


36 W Quad Speaker யை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்டிவில் Dolby Audio சவுண்ட் சிஸ்டத்தோடு கூடிய காட்சிகளை பார்க்க முடியும். குரோம்காஸ்ட் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி  ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது. கூகுள் அசிஸ்டெண்ட், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் உள்ளிட்டவற்றையும்   பயன்படுத்தும் விதமாக இந்த ஸ்மார்ட் டிவிக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண