போலிச் செய்திகளையும், பொய்யான தகவல்களையும் அதிகளவில் பரப்புவதற்காக வாட்சாப் செயலி பயன்படுத்தப்படுகிறது. போலிச் செய்திகளைத் தடுப்பதற்காகப் பல்வேறு புதிய சிறப்பம்சங்களை வாட்சாப் நிறுவனம் கூறி வந்தாலும், வாட்சாப் பயனாளர்கள் பலருக்கும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொடர்ந்து சென்று சேர்கின்றன. எனவே வாட்சாப் செயலியில் கிடைக்கும் தகவல்கள் உண்மையா, பொய்யா என்பதை சரிபார்க்கும் பழக்கம் நமக்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறிப்பாக, தேர்தல் காலங்களிலும், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புக் காலத்திலும் போலியான செய்திகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியா முழுவதும் வாட்சாப் பயனாளர்கள் தாங்கள் பெறும் தகவல்களை சரிபார்க்க வாட்சாப் மூலமாகவே ஃபேக்ட் செக் மேற்கொள்ள சுமார் 10 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்த நிறுவனங்களின் எண்கள் அனைத்துமே சர்வதேச ஃபேக்ட் செக்கிங் நெட்வொர்க் ( International Fact-Checking Network (IFCN)) என்ற சர்வதேச அமைப்பாக் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றின் மூலமாக படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் ரெக்கார்டிங் முதலானவற்றை உடனுக்குடன் சரிபார்க்க முடியும். மேலும், இந்த எண்களின் ஆங்கிலம் மட்டுமின்றி, வங்காளம், இந்தி, மராத்தி, பஞ்சாபி முதலான 11 இந்திய மொழிகளிலும் நம்மால் உரையாட முடியும்.
வாட்சாப்பில் கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை சோதனை செய்ய பின்வரும் இந்த ஃபேக்ட் செக்கிங் நிறுவனங்களின் எண்களில் தொடர்புகொள்ளலாம்...
AFP: +91 95999 73984Boom: +91 77009-06111 / +91 77009-06588Fact Crescendo: +91 90490 53770Factly: +91 92470 52470India Today: +91 7370-007000Newschecker: +91 99994 99044Newsmobile: +91 11 7127 9799Quint WebQoof: +91 96436 51818The Healthy Indian Project: +91 85078 85079Vishvas News: +91 92052 70923 / +91 95992 99372
இந்த நிறுவனங்களின் எண்கள் மட்டுமின்றி, சர்வதேச ஃபேக்ட் செக்கிங் நெட்வொர்க் சார்பில் வாட்சாப்பில் இயங்கும் சாட்பாட் ஒன்று பயனாளர்களுக்குத் தகவல்களை சரிபார்க்க உதவி செய்கிறது. இந்த வசதி உலகம் முழுவதும் சுமார் 70 நாடுகளுக்கும் மேல் பல்வேறு ஃபேக்ட் செக்கர்களை இணைப்பதற்குப் பயன்படுகிறது.
வாட்சாப் செயலி மூலமாக ஃபேக்ட் செக்கிங் நிறுவனங்களின் எண்களைப் பயன்படுத்துவது எப்படி?
வாட்சாப் பயனாளர்கள் தங்கள் ஃபோனில் இந்த நிறுவனங்களின் எண்களைத் தங்கள் காண்டாக்ட்களில் சேர்க்க வேண்டும். அதன்பிறகு, இந்த எண்ணிற்கு வாட்சாப்பில் சென்று `Hi' என்று அனுப்புவதன் மூலம் அந்த நிறுவனங்களோடு இணைந்து கொள்ள முடியும். மேலும், இந்த ஃபேக்ட் செக்கிங் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே பரிசோதித்துள்ள கண்டெண்ட்களை வாட்சாப் மூலமாக உங்களுக்குத் தொடர்ந்து பகிர்வார்கள். மேலும், உங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவலை அனுப்பினால், சிறிது நேரத்திற்குப் பிறகு, அதுவும் சரிபார்த்து அதன் உண்மைத்தன்மை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.