Hijab verdict: ஹிஜாப் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்..ஆனால் இதை செய்தால்.. எச்சரித்த கர்நாடக முதலமைச்சர்

ஹிஜாப் குறித்து உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஹிஜாப் குறித்து உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளனர்.  

தீர்ப்பின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொகா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்த, கூட்டம் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்துத் தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இப்போதுதான் ஊடகங்கள் மூலம் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை அறிந்தேன். மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் ஹிஜாப் அத்தியாவசியம் அல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த கவலையை ஏற்படுத்தியது. 

உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அதை நாம் (அரசு) அமல்படுத்தும்போது, எல்லோரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒத்துழைத்து அமைதி காக்க வேண்டும். அதுதான் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது. 

நீதிமன்ற உத்தரவின்படி, மக்கள், அனைத்து சமுதாயத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உத்தரவை ஏற்று மாணவர்களுக்கு கல்வி அளிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தத் தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ”நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும், மாநிலமும் நாடும் முன்னேற வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் அடிப்படை வேலை படிப்பதுதான். எனவே இதையெல்லாம் விட்டுவிட்டு, அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola