பயனர்களிடம் இருந்து பணத்தை திருடும் செயலி ஒன்று கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை கிட்டத்தட்ட 10,000 பேருக்கு மேல் டவுன்லோட் செய்திருப்பதாக வரும் செய்திதான் அதிர்ச்சியை அளிக்கிறது. ஏனெனில், இந்த ஆப்பை டவுன்லோட் செய்து பயனர்கள் தங்களது தரவுகளை கொடுக்கும்போதே அதனை ஹேக்கர்களுக்கு அனுப்பி விடுகிறதாம் இந்த ஆப் மூலம் ஹேக்கர்கள் பயனர்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம், ஆன்லைன் வேலெட், இன்சூரன்ஸ் செயலி, க்ரிப்டோ கரன்சி போன்றவற்றில் உள்ள பணங்களை திருடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதனால் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து தரவுகளை தந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய செயலை செய்யும் இந்த செயலியின் பெயர், "கியூஆர் கோடு & பார்கோடு - ஸ்கேனர் (QR Code & Barcode - Scanner)" ஆப். இந்த ஆப்பை தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தடை செய்துவிட்டாலும், எல்லோரும் ஒரு முறை தங்களது மொபைலை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப்பை யாரும் ஏபிகே-வாக வெளியில் வேறு தளங்களில் கிடைத்தாலும் தரவிறக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.



2021 ஜனவரி மாதத்தில், இணையதள திருட்டு நிர்வகிப்பு மற்றும் தடுப்பு ஆகிய செயல்களை செய்யும் க்ளீஃபி என்ற நிறுவனம்தான் இந்த ட்ரோஜன் ஆப்பை முதலில் கண்டுபிடித்து கூறியது. இந்த ஆப் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளையும் எஸ்.எம்.எஸ்-களையும் திருடுவதாக அது தெரிவித்தது. இந்த மால்வேர் மிகவும் அறிவார்ந்த மால்வேர் என்றும், அது ப்ளெயின் சைட்டில் கூட யாருக்கும் தெரியாமல் மறைந்துகொள்ளும் திறன் படைத்தது என்று கூறுகின்றனர். இந்த ஆப் தொடக்கத்தில் பயனர்களுக்கு லாபத்தை வழங்கியிருக்கிறது. அது விளம்பரப்படுத்தப்பட்டபோது, பலர் தரவிறக்கி பயம்படுத்தி உள்ளனர், அப்போதெல்லாம் நல்ல பயனுள்ள செயலியாக இருந்துள்ளது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு இதனை டவுன்லோட் செய்பவர்களுக்கு உடனடியாக இன்னொரு ஆப்பை டவுன்லோட் செய்ய பரிந்துரைக்கிறது. கியூ ஆர் கொடு ஸ்கேனர்: ஆட் ஆன் என்று கூறப்படும் இந்த ஆப், நிறைய டீபூட் மால்வேர் வைரஸ்களை கொண்டதாகும்.



இந்த ஆப் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தவுடன், ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனை கண்ட்ரோல் செய்ய அனுமதி கேட்கிறது. அதனை கொடுத்த பிறகு நமது எஸ்.எம்.எஸ், லாகின் தகவல்கள், பாஸ்வேர்ட், டூ-பேக்டர் ஆதென்டிகேஷன் ஆகியவற்றை எடுக்கிறது. அதுமட்டுமின்றி டீபோட் கண்ட்ரோல் கொண்டு, கீபோர்டு அனுமதியை பெறுகிறது. அதன்மூலம் இன்னும் சென்சிடிவான விஷயங்களை மொபைலில் இருந்து ஹேக் செய்து எடுக்கிறது. "கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகாரப்பூர்வமாக கிடைத்துக்கொண்டிருந்த இந்த ஆப் ஒரு சில அனுமதிகளை மட்டுமே கேட்கிறது. அதனை வைத்து இந்த செயலி பயனர்களின் அனைத்து தகவல்களையும் எடுத்து பிறகு பணத்தை எடுக்க துவங்குகிறது", என்று அறிக்கை கூறுகிறது. அப்படி இந்த செயலி உங்களிடம் இருக்குமாயின் உடனடியாக டெலிட் செய்துவிடுங்கள்..