மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது.
05.02.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் எந்தவித ஒப்புதனும் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது.
கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்த பசவராஜ் பொம்மை! - முக்கிய அம்சங்கள் என்ன..?
இந்த அறிவிப்பு வரும் கர்நாடக அரசின் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எப்படி இருப்பினும், தமிழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக அரசின் மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
முன்னதாக, கர்நாடக அரசின் செயலுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு உழவர்கள் நலனை பாதிக்கும் அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மாநில பட்ஜெட் 2022-2023 நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் செலவு ரூ. 2.6 லட்சம் கோடி ஆகும். நிதியமைச்சர் பதவியையும் வகிக்கும் முதல்வர், கர்நாடக சட்டசபையில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில், மேகதாது சமன்படுத்தும் நீர்த்தேக்கம் மற்றும் பெங்களூரு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது.மத்திய அரசின் உரிய ஆணையத்திடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று இவை செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் ரூ.1,000 கோடி மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேகதாது அணைக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்த கர்நாடகா - காட்டமாக அறிக்கை வெளியிட்ட அன்புமணி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்