கூகுள் நிறுவனத்தின் முக்கியமான செயலிகள் ஒன்று கூகுள் போட்டோஸ். இந்த செயலி மூலம் பலர் தங்களது புகைப்படங்களை ஸ்டோர் செய்து வருகின்றனர். அண்மையில் இந்த செயலியில் ஸ்டோரேஜ் வசதிக்கு கூகுள் நிறுவனம் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்தது. அது என்ன? மேலும் நீங்கள் அடிக்கடி கூகுள் போட்டோஸ் செயலியில் உங்களுடைய படங்களை ஸ்டோர் செய்யும் நபர் என்றால் நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?


போட்டோவின் தரம்:


நீங்கள் பொதுவாக கூகுள் போட்டோஸ் செயலியில் படத்தை ஸ்டோர் செய்யும் போது மூன்று விதமான விருப்பங்கள் இருக்கும். அதாவது எக்ஸ்பிரஸ், சேவர் மற்றும் ஒரிஜினல் குவாலிட்டி. இதில் ஒரிஜினல் குவாலிட்டியை தேர்வு செய்யாமல் நீங்கள் ஸ்டோர் செய்தால் படத்தின் தரம் சற்று குறைவாக தான் ஸ்டோர் ஆகிவிடும். ஆகவே உண்மையான தரத்தில் படம் உங்களுக்கு கூகுள் போட்டோஸ் தளத்தில் பேக் அப் ஆக வேண்டும் என்றால் அந்த விருப்பத்தை ஒவ்வொரு முறையும் சரியாக நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். 


இலவச ஸ்டோரேஜ் அளவு:


கூகுள் போட்டோஸ் செயலியில் ஸ்டோர் செய்வதற்கு அண்மையில் ஒரு புதிய கட்டுப்பாடு வந்தது. அதாவது ஒவ்வொரு கூகுள் பயனாளருக்கும் தங்களுடைய கூகுள் போட்டோஸ் செயலியில் இலவசமாக 15 ஜிபி வரை படங்களை ஸ்டோர் செய்யலாம். அதற்கு மேலே ஸ்டோர் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தி கூடுதல் ஸ்டோரேஜ் வசதியை பெற வேண்டும். 




இலவச அளவை தாண்டினால்:


கூகுள் போட்டோஸ் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள 15 ஜிபி ஸ்டோரேஜை தாண்டும் பட்சத்தில் உங்களால் புதிதாக படங்களை பதிவேற்றம் செய்ய முடியாது. அத்துடன் பேக் அப் செய்யவும் முடியாது. இரண்டு ஆண்டுகளை பேக் அப் செய்ய முடியவில்லை என்று கூகுள் போட்டோஸ் செயலியை பயன்படுத்தாமல் விட்டால் ஏற்கெனவே இருந்த படங்களும் அழிந்துவிடும். இதனால் பேக் செய்ய முடியவில்லை என்றாலும் அவ்வப்போது கூகுள் போட்டோஸ் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். 


கூகுள் போட்டோஸ் செயலி எப்படி நிர்வகிப்பது?


உங்களுடைய மொபைல் போனில் கூகுள் போட்டோஸ் செயலிக்கு சென்று உங்களுடைய கூகுள் கணக்கை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் அதில் இருக்கும் பேக் அப் மற்றும் ஸ்டோரேஜ் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் இருக்கும் மேனேஜ் ஸ்டோரேஜ் என்பதை தேர்வு செய்து உள்ளே இருக்கும் தேவையில்லா படங்களை நீங்கள் அழித்துவிடலாம். ஏனென்றால் ஒரு சில படங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கூகுள் போட்டோஸ் தானாக பேக் அப் செய்துவிடும். அதை நீங்கள் இப்படி அழிக்கும் பட்சத்தில் ஸ்டோரேஜ் இடம் சற்று குறையும். 


மேலும் படிக்க:இந்த விலைக்கு இவ்வளவு சிறப்பம்சங்களா? கெத்து காட்டுமா ஜியோ போன் நெக்ஸ்ட்?