பிரபல இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய மொபைல் போன் தயாரித்து வருவதாக அறிவிப்பை வெளியிட்டது. அந்த மொபைல் போன் மிகவும் குறைந்த விலையில் சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மொபைல் போன் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த மொபைல் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. இதன் விலை என்ன?
ரிலையன்ஸ் ஜியோ நெக்ஸ்ட் போனில் கூகுள் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உள்ளது. அத்துடன் இந்த மொபைல் போனில் குவால்கம் கியூஎம் 215 தொழில்நுட்பம் உள்ளது. மொபைல் போனில் முழு ஹெச்டி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 64 பிட் குவாட்கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. பின்னால் இருக்கும் கேமரா 13 மெகா பிக்சல் மற்றும் முன்னால் இருக்கும் கேமரா 8 மெகா பிக்சல் திறன் உடன் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர 1080 பிக்சல் தரத்தில் வீடியோவை ரெக்கார்டு செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மொபைல் போனில் ரேமை செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் டியோ கோ என்ற செயலியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் கூகுள் கேமரா கோ என்ற செயலியின் புதிய வெர்சனும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் விலை என்ன?
இந்த மொபைல் போனின் விலை 50 டாலர்களாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் இது 4000 ரூபாய் வரை இருக்கலாம். எனினும் இந்த மொபைல் போன் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி சந்தைக்கு வரும் என்று மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான விலை என்னவென்று ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இது மிகவும் குறைந்த விலையில் அனைத்து மக்களையும் கவரும் வகையில் இருக்கும் மொபைல் போன் என்பதால் இதன் விலை மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.
ஜியோ சேவைகளுக்கென சிறப்பம்சமான, குறைந்த விலையில், லேட்டஸ் அப்டேட் வழிமுறையை இந்த ஃபோன் அறிமுகத்திலும் ஜியோ பின்பற்றுகிறது. இதன் மூலம், மலிவு விலையில் 5ஜி ஃபோன் என்பதாக விற்பனைக்கு வர உள்ளது.
மேலும் படிக்க: Netflix, Amazon Prime, Disney+ Hotstar - இவற்றை இலவசமாகப் பயன்படுத்துவது எப்படி?