கடந்த ஜனவரி முதலே வாட்ஸ் அப் குறித்த பரபரப்புதான். புதிய நிபந்தனைகளை விதித்து கடந்த ஜனவரியில் சர்ச்சையில் சிக்கியது வாட்ஸ் அப். குறிப்பாக புதிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் சேவையை தொடர முடியும் என்றும், இல்லையென்றால் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தது. தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்வோம் என்ற வாட்ஸ் அப்பின் அறிவிப்பை பயனாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பலர் வாட்ஸ் கணக்கில் இருந்து வெளியேறினர். இதனை பயன்படுத்தி டெலிகிராம், சிக்னல் போன்ற பல செயலிகள் உள்ளே நுழைந்தன. 


அந்தக் குறிப்பிட்ட காலத்தில் டெலிகிராம் தங்களது பயனர்களை அதிகரித்துக்கொண்டது. பின்னர் படம் லிங்க் டவுன்லோட் வசதி,  குழு சாட் என வாடிக்கையாளர்களை வெளியேறாமல் பார்த்துகொள்கிறது.  இந்நிலையில் புதிய அப்டேட்டாக குரூப் வீடியோ கால் பேசும் வசதியை டெலிகிராம் அறிமுகம் செய்துள்ளது.கிட்டத்தட்ட செயலி அறிமுகமாகி ஒரு வருடத்திற்கு பிறகு இந்த அப்டேட் வந்துள்ளது. செல்போன், டேப்லட், டெஸ்க்டாப் என அனைத்து ட்வைஸ்களிலும் இந்த வசதியை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.




கேமரா ஐகானை க்ளிக் செய்வதன் மூலம் ஆடியோவானது வீடியோ காலாக மாறும். பின்னர் வீடியோ குரூப்பில்  ஒருவராக நீங்களும் இருப்பீர்கள். மேலும் ஸ்கிரீனை ஷேர் செய்யும் வசதியையும் டெலிகிராம் கொடுத்துள்ளது. உங்களது கேமரா அல்லதுபோன் ஸ்கிரீன் என எதை வேண்டுமானாலும் வீடியோ கால் வசதியின் போது ஷேர் செய்யலாம்.ஸ்பிளிட் ஸ்கிரீன் மூலம் பங்கேற்பார்களை காணவும், மற்ற வசதிகளை பெறவும் டெலிகிராம் வசதி கொடுத்துள்ளது. ஆனால் இந்த குறிப்பிட்ட வசதி டேப்லட் மற்றும் கணினியில் மட்டுமே கிடைக்கும்.


ஜூம் மீட்டிங்கில் ஸ்கீரின் ஷேர் செய்யும் வசதியைப்போலவே டெலிகிராம் ஸ்கிரீன் ஷேர் வசதியை டெஸ்க்டாப்க்கு கொடுத்துள்ளது. அதேபோல் டெக்ஸ்க்டாப் வீடியோ  சாட்டில் இருக்கும் யாராவது ஸ்கிரீனை ஷேர் செய்தால் அவர்கள் தானாகவே 'பின்' செய்யப்படுவார்கள். அதாவது முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.




டெலிகிராமில் குரூப் வாய்ஸ் காலில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இணைந்து பேசலாம். ஆனால் குரூப் வீடியோ காலில் இப்போதைக்கு 30 பயனாளர்களை மட்டுமே அனுமதிக்க  முடியும் என டெலிகிராம் தெரிவித்துள்ளது. அதாவது வீடியோ காலுக்கு அழைப்பவர் இல்லாமல் 29 பேர் மட்டுமே இணைய முடியும். விரைவில் வீடியோ காலில் அதிக பயனர்கள் இணைய அப்டேட் கொண்டு வரப்படும் என டெலிகிராம் தெரிவித்துள்ளது. வீடியோ கால் அப்டேட் மட்டுமின்றி சாட் பேக்கிரவுண்ட், பல வண்ண வால்பேப்பர், புதிய எமோஜிகள்  போன்ற அப்டேட்களையும் கொண்டு வந்துள்ளது.


முன்னதாக டெலிகிராம், சிக்னல் வளர்ச்சி குறித்து சென்சார் டவர் டேட்டா புள்ளிவிவரம் வெளியிட்டது. அதன்படி, டெலிகிராம், சிக்னல் செயலிகள் 1200% வளர்ச்சி அடைந்துள்ளன. 2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் சிக்னல் செயலியை முதல்முறையாக பதிவிறக்கம் செய்தவர்கள் 1192% ஆக உள்ளது.  ஓராண்டு இடைவெளி கணக்கீடுப்படி ஆண்ட்ராய்ட் மற்றும் ios பயன்பாட்டில் டெலிகிராம் செயலி 98% அதிகரித்துள்ளது. 161மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப் அறிவிப்பு வெளியிட்ட ஜனவரியில் ராக்கெட் வேகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டது டெலிகிராமும், சின்னலும். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் பதிவிறக்கம் குறைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


வாட்ஸ்-அப்பில் ஒருவரின் நம்பரை Save பண்ணாமலேயே மெசேஜ் அனுப்பமுடியுமா? இதை ட்ரை பண்ணுங்க..!