Whatsapp-இல் ஒருவரின் நம்பரை Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்புவதற்கான வசதிகள் உள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையில்லாத எண்ணினை மொபைலில் சேமிக்கத்தேவையில்லை.
வாட்ஸ் அப் செயலி மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகிவிட்டது. தனது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது தொடங்கி தற்போது மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கான லிங்கினை அனுப்புவதற்கும் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது இந்த வாட்ஸ் அப். அந்தளவிற்கு அதன் வாட்ஸ் அப் செயலியின் பயன்பாடு மக்களிடம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாம் தற்போது வாட்ஸ் அப்பில் யாராவது ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப விரும்பினால் முதலில் அந்த நம்பரை நம்முடைய மொபைலில் ஏதாவது பெயரினைக்கொடுத்து சேமிக்க வேண்டியதாக இருக்கிறது. அதன் பிறகு தான் நாம் அந்த நம்பருக்கு மெசோஜினை அனுப்ப முடியும் என்ற முறை இருந்தது. ஆனால் ஏற்கனவே நம்முடைய மொபைலில் 100-க்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் இருக்கும் போது தேவையில்லாத எண்களை சேமிக்க வேண்டாம் என்ற எண்ணம் ஏற்படும்.
உதாரணமாக.ஆன்லைனில் நீங்கள் ஏதாவது ஷாப்பிங் செய்யவோ அல்லது ஏதாவது டாக்குமெண்ட் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பர் நமக்கு அடிக்கடி தேவைப்படுவதில்லை. மேலும் அவர்களின் நம்பரை நாம் சேவ் செய்ய விரும்புவதும் இல்லை இருந்தாலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பரை சேமித்த பிறகு தான் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால் அத்தகைய நம்பரை சேவ் (save) செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகிள் குரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் பிரௌசரை ஓபன் செய்ய வேண்டும்.
பிறகு உங்கள் பிரௌசரில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறோர்களோ அந்த எண்ணினை என்டர் செய்ய வேண்டும். 918023560787 என்று டைப் செய்துக்கொள்ள வேண்டும்.
தற்போது நம்முடைய ஸ்க்ரீனில் அரட்டைக்கு செல் (continue to chat) என்று பச்சை நிறப்பட்டன் இருக்கும். அதனை அழுத்தவும்.
இதனையடுத்து தானாகவே நம்முடைய வாட்ஸ் அப் செயலி திறந்து நாம் எந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்ப விரும்புகிறோமோ? அந்த பகத்திற்கு சென்றுவிடும். தொடர்ந்து நாம் நம்பரை சேவ் செய்யாமலே நம்முடைய மெசேஜினை அனுப்பிக்கொள்ளலாம்.
WhatsAppNumber என்பதற்குப் பதில் நம்பர் டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.
இந்த வழிமுறைகளைப்பயன்படுத்தி நம்முடைய மொபைல் போனில் தேவையில்லாத எண்களை சேவ் செய்யாமல், வாட்ஸ் அப் மெசேஜினை எளிதாக அனுப்ப முடியும். மேலும் தற்போது அதிகரித்து வரும் யூசர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.