டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் டைமன்சிட்டி 900, 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா மூலமாக வாங்குவதற்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. டெக்னோ பிராண்டின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரான்ஷன் ஹோல்டிங் நிறுவனமான டெக்னோ மொபைல், இன்று டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ போவா 5ஜி இந்தியாவில் ரூ.19,999 என அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனை அமேசான் இந்தியா மூலமாக பிப்ரவரி 14 முதல் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை ஏதர் பிளாக் நிறத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுகச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தின் அறிமுகச் சலுகையாக ரூ.1999 மதிப்புள்ள பவர்பேங்க் இலவசமாக வழங்கப்படுகிறது.
இது 1080 x 2460 பிக்சல் ரெசொல்யூஷன் உடன் 6.95 இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 480பிபிஐ பிக்சல் டென்சிட்டியோடு, 82.8 சதவீத டிஸ்ப்ளே டூ பாடி விகித அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி கேமராவிற்காக பஞ்ச் ஹோல் நாட்ச் டிஸ்பிளே இருக்கிறது. டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனானது மாலி ஜி68 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 செயலியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போண் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது, இந்த டிவைசில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டும் இருக்கிறது. இது 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதியோடு வருகிறது.
இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் ஆதரவோடு வருகிறது. கூடுதலாக இந்த சாதனத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என இரட்டை எல்இடி ஃபிளாஷ் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வசதியோடு வருகிறது. அதேபோல் டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஹைஓஎஸ் 8.0 இல் இயங்குகிறது. 6000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது இதை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என சைட்- மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஃபேஸ் அன்லாக் பாதுகாப்பு அம்சமும் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளுக்கு என டூயல் சிம் ஆதரவு, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ் போன்ற இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது.