பூமியில் இன்று மதியம் சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. 2021ஆம் ஆண்டில் நடைபெறும் முதல் சூரிய கிரகணம் இது தான். இந்தச் சூரிய கிரகணம் தொடர்பாக நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணம் பூமியின் வடக்கு அரைக்கோளம்(Northern Hemisphere) பகுதிகளில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணம் நன்றாக தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 


சூரிய கிரகணம் எப்போது நிகழும்?


பூமி சூரியனை எவ்வாறு வட்டப்பாதையில் சுற்றுவதைப்போல், சந்திரன் பூமியை வட்டப்பாதையில் சுற்றுகிறது. இதனால் பூமி, சந்திரன், நிலவு ஒரே பாதையில் நேராக இருக்கும் போது சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும். இதில் பூமிக்கும், சூரியனுகுக்கும் நடுவே நிலவு வரும் போது சூரிய ஒளி வெளிச்சத்தை நிலவு பூமிக்கு வரவிடாமல் சற்று தடுக்கும். அப்போது ஏற்படுவதே சூரிய கிரகணம். 


ரிங்க் ஆஃப் ஃபையர் சூரிய கிரகணம் என்றால் என்ன?


பூமியை சுற்று வரும் நிலவு ஒரு முறை பூமிக்கு அருகேயும், மற்றொரு முறை தொலைவாகவும் இருக்கும். அப்படி நிலவு பூமிக்கு தொலைவே இருக்கும் போது அது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் வந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். அந்த சமயத்தில் நிலவு பூமியிலிருந்து தொலைவில் இருப்பதால் சூரியனின் ஒளியை முழுமையாக நிலவு மறைக்காது. அப்போது அது வெளிச்சமான சூரியன் மீது ஒரு சிறிய கருப்பு வட்டம் மட்டும் தோன்றும். அதாவது ஒரு கருப்பு ரிங்க் போல சூரியன் இருக்கும். இது தான் ரிங்க் ஆஃப் பையர் சூரிய கிரகணம். இது எப்போதும் வழக்கமாக நடைபெறும் சூரிய கிரகணம். இன்று நடைபெறும் சூரிய கிரகணமும் இந்த வகை கிரகணம் தான். பூமியிலிருந்து நிலவு கிட்டதட்ட சுமார் 3.57 லட்சம் கிலோமீட்டர் முதல் 4.11 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல் சூரியனிலிருந்து நிலவு சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 




இந்தியாவில் இன்றைய சூரிய கிரகணத்தை எங்கு எப்போது பார்க்கலாம்?


இந்தியாவை பொருத்தவரை இன்றைய சூரிய கிரகணம் லடாக் யூனியன் பிரதேசம மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் மட்டும் தெரியும். அங்கு சரியாக மதியம் 1.42 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம் 3 நிமடங்கள் வரை இருக்கும். ஆனால் இது அவ்வளவு தெளிவாக தெரியாது என்று நாசா தெரிவித்துள்ளது. கிரீன்லாந்து, சைபிரியா மற்றும் வடக்கு துருவ பகுதிகளில் மட்டும் இன்றைய சூரிய கிரகணம் நன்றாக தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:Sundar Pichai Birthday: உலகை இயக்கும் இணையத்தின் இதயம் சுந்தர் பிச்சை!