பொதுவாக பண்டிகை காலம் என்றால் ஜவுளி கடை, நகைக்கடை தொடங்கி அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதும். மேலும் பல கடைகள் இந்த பண்டிகை நாட்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல சலுகைகளை அறிவிப்பார்கள். அந்தவகையில் சமீப காலங்களாக தீபாவளி மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகளை குறி வைத்து ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-வர்த்தக தளங்கள் தங்களுடைய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தற்போது நடைபெற்று வருகிறது.


 


இந்த சேல் முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அதில் வாங்க வேண்டிய கணினி சார்ந்த பொருட்கள் என்னென்ன?


ஹெச்.பி 64 ஜிபி பெண்டிரைவ்:




ஹெச்.பி நிறுவனத்தின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட பெண்டிரைவ் எப்போதும் 1500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும். அது தற்போது இந்த பண்டிகை சேலில் 57 சதவிகிதம் குறைந்து 639 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


 


சிகேட் 1.5 டிபி ஸ்டோரேஜ் ஹார்டு டிஸ்க்:




ஸ்டோரேஜ் ஹார்டு டிஸ்க் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த சேல் ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளது. இதில் சிகேட் 1.5 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹார்டு டிஸ்க் 5999 ரூபாயிலிருந்து 3,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சலுகை விலை என்பதால் ஸ்டோரேஜ் ஹார்டு டிஸ்க் வாங்க நல்ல வாய்ப்பாக அமைகிறது. 


 


லெனோவோ வயர்லஸ் கீபோர்டு மற்றும் மௌஸ்:




லெனோவோ நிறுவனத்தின் வயர்லஸ் கீபோர்டு மற்றும் மௌஸ் ஆகிய இரண்டும் பொதுவாக  1711 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த சேலில் அதன் விலை 999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வயர்லஸ் கீபோர்டு மற்றும் மௌஸ் செட்டாக இந்த விலைக்கு கிடைப்பது சற்று அரிதான ஒன்று. 


 


போர்டானிக்ஸ் பவர் சார்ஜிங் ஸ்டேஷன்:




போர்டானிக்ஸ் நிறுவனத்தின் 6 போர்ட் வசதி கொண்ட சார்ஜிங் ஸ்டேஷன் விலை 1299 ரூபாயாக உள்ளது. ஆனால் இந்த அமேசான் சேலில் அது குறைக்கப்பட்டு 599 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


 


வி2ஏ யூவி லைட் சானிடைசர் வெண்ட்:




உங்களுடைய கணினி மற்றும் மின்னணு பொருட்களை கிறுமிகள் இல்லாமல் சுத்தமாக வைக்க விரும்பினால் இந்த வெண்டை வாங்கலாம். இது யூவி கதிர்களின் உதவியுடன் இருக்கும் கிறுமிகளை அழிக்க உதவுகிறது. இந்த கருவியின் விலை வழக்கமாக 1499 ரூபாயாக இருக்கும். அது தற்போது குறைக்கப்பட்டு இது 599 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


மேலும் படிக்க:சூரியனில் ஏற்பட்ட பெரு வெடிப்பு... இன்று முதல் 2 நாட்கள் புவி காந்த புயல் ஏற்படும் அபாயம்!