இன்று உலகில் மிகப்பெரிய புவி காந்த புயல் ஏற்பட இருப்பதாக அமெரிக்காவின் கடலியல் மற்றும் வளி மண்டல நிறுவனத்தி விண்வெளி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. கடந்த வியாழன் அன்று சூரியனிலிருந்து அதிக ஈர்ப்பு திறன் கொண்ட சக்தி வாய்ந்த பிளாஸ்மா மேகங்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக பூமியை நாளை புவி காந்த புயல் தாக்க இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.


இன்று (அக்டோபர் 30) பூமியை சக்தி வாய்ந்த புவி காந்த புயல் தாக்கும் என்றும், நாளை (அக்டோபர் 31) மிதமான புவி காந்த புயல் பூமியை தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. கடந்த வியாழன் அன்று சூரியனிலிருந்து வெளியான CME எனப்படும் ப்ளாஸ்மாவை சூரியவியல் ஆய்வு நிறுவனம் படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறது. வியாழன் அன்று வெளியான கதிர்கள் X1 பிரிவு என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.



 X இல் தொடங்கி X1, X2 என X10 வரை சூரியனிலிருந்து வெளியாகும் CME வகைப்படுத்தப்படுகிறது. இதில் X10 வகை மிகவும் அடர்த்தியானது என்றும் அதிக பாதிப்பை தரக்கூடியது எனவும் நாசா தெரிவிக்கிறது. பூமியின் நேர்கோட்டில் சூரியனில்  sunspot AR2887 என்ற இடத்தில் ஏற்பட்ட ராட்சத வெடிப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலமான கொரோனாவில் ஏற்படும் இந்த CME சூரியனிலிருந்து வினாடிக்கு 1,260 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வெளியேறி பூமிக்கு அருகே செல்லும். இதனால் பூமியின் இயல்பான புவி ஈர்ப்பு திறன் பாதிக்கப்படும். சூரியனில் ஏற்பட்ட வெடிப்பால் ஒரு லட்சம் கிலோ மீட்டர் உயரம் கொண்ட ராட்சத பிளாஸ்மா சூரியனிலிருந்து வினாடிக்கு 700 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியேறி உள்ளது.


இதனால் இன்று ஏற்பட இருக்கும் புவி காந்த புயல், பூமியின் காந்த மண்டலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நாசா எச்சரித்து உள்ளது. சூரியனிலிருந்து வெளியான பிளாஸ்மா பூமியை தாக்கும்பட்சத்தில் மின் விநியோகம், தவறான எச்சரிக்கை ஒலிகள், செயற்கைக் கொள்களில் தொழில்நுட்பக் கோளாறுகள், தொலைதொடர்பு பிரச்சனைகள், மொபைல், ரேடியோ சிக்னல் குறைபாடுகள், எலெக்டிரானிக் கருவிகள் செயலிழப்பு, காந்தத்தை கொண்ட இயங்கும் கருவிகள் செயலிழக்க பெரும் அளவில் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது


இந்த புவி காந்த புயலின் அரோராக்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்து லோவா மற்றும் ஓரேகான் வரை வான்வெளியில் தென்படும் என அமெரிக்காவின் கடலியல் மற்றும் வளி மண்டல நிறுவனம் தெரிவித்துள்ளது