Google pay ல் ஆன்லைன் பரிவர்த்தனையின் போது உங்களது upi பின் மறந்து விட்டால் அதனை 5 நிமிடங்களில் எளிமையாக மாற்றிவிட்டு, மீண்டும் பணபரிவர்த்தனையை தொடங்கமுடியும்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதன் பயன்பாடுகளும் மக்களிடம் அதிகரிக்கத்தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக முன்பெல்லாம் குறைந்த அளவிலான பணம் என்றாலும் அதனைப் பாதுகாப்பாக வங்கிகளுக்கு சென்று செலுத்தி வந்தனர். ஆனால் இப்பொழுது தொகை அதிகமாக இருந்தாலும் பணப்பரிவர்த்தனைகள் எல்லாம் ஆன்லைக்கு மாறிவிட்டன. இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங், இபி பில், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதால் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக பல பேமன்ட் ஆப்கள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் Google pay ன் மூலம் தான் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். சிறிய கடைகள் முதல் பெரும் வணிக நிறுவனங்களில் கூட Google pay மிகவும் பிரபலம் அடைந்துவிட்டது. Google pay வினை மொபைலில் ஆக்டிவ் செய்து , பயனர்களின் UPI, மொபைல் எண், கணக்கு எண் மற்றும் QR code னை பயன்படுத்தியும் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
மேலும் இந்த ஆன்லைன் பயன்பாட்டில் பயனர்கள் UPI PIN ஐ மறந்து விட்டால் அல்லது UPI PIN ஐ reset செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நாம் இதனை மாற்றிக்கொள்ளலாம். முதலில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் UPI PIN பற்றி அறிந்து கொள்வோம்.
UPI PIN என்றால் என்ன?
நாம் payment app ல் ஒவ்வொரு முறையும் புதிய கட்டணக்கணக்கினைச்சேர்க்கும் போது அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் போது நாம் உள்ளே செல்வதற்காக பயன்படுத்தும் எண்ணே UPI PIN (unified payment interface) ஆகும். தமிழில் ஒரு மித்த கொடுக்கல் இணைப்பிட முகம் என்றழைக்கப்படுகிறது. முதன் முறையாக payment appல் நீங்கள் அக்கவுண்டினைச்சேர்க்கும் பொழுது UPI பின் அமைக்கும்படி உங்களிடம் கேட்கப்படும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கிற்கு ஏற்கனவே UPI பின் இருந்தால் அதே UPI பின்னினை Google Pay ல் பயன்படுத்தலாம். இதோடு Google Pay யினைப்பயன்படுத்தியும் உங்கள் UPI பின்னை மாற்றம் செய்ய முடியும்.
Google Pay இல் UPI PIN ஐ மாற்றுவதற்கான வழிமுறைகள்:
- முதலில் Google pay வினை திறக்கவும்.
- பின்னர் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்களது புகைப்படத்தினை கிளிக் செய்யவும்.
- இதனையடுத்து வரும் பக்கத்தில் உள்ள வங்கி கணக்கிற்குள் நுழைந்து நீங்கள் UPI PIN திருத்தம் செய்ய விருக்கும் வங்கி கணக்கினை தேர்ந்தெடுக்கவும்.
- வங்கி கணக்கின் மீது பல முறை கிளிக் செய்யும் பொழுது, UPI PIN ஐ மாற்றவும் என தெரிவிக்க வேண்டும்.
- பின்னர் புதிய UPI PIN ஐ உருவாக்கவும்.
- மீண்டும் புதிய UPI PIN ஐ பயன்படுத்தி பணபரிவர்த்தனை உள்ளீட்டிற்கு சென்று பயன்பெறலாம்.
Google Pay இல் UPI PIN ஐ Reset செய்வதற்கான வழிமுறைகள்:
உங்களது Google Pay இல் UPI PIN ஐ Reset செய்வதற்கு நம்முடைய டெபிட் கார்டு விபரங்கள் முக்கியமாக ஒன்றாக உள்ளது.
- முதலில் Google pay வினை திறக்கவும்.
- பின்னர் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்களது புகைப்படத்தினை கிளிக் செய்ய வேண்டும்
- இதனையடுத்து வரும் பக்கத்தில் உள்ள வங்கி கணக்கிற்குள் நுழைந்து நீங்கள் இல் UPI PIN திருத்தம் செய்ய விருக்கும் வங்கி கணக்கினை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் forget pin ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- இதனையடுத்து அடுத்தப்பக்கத்தில் உங்களது டெபிட் கார்டு எண்ணின் கடைசி 6 இலக்க எண்கள் மற்றும் கார்டின் வேலிடிட்டி தேதியினை உள்ளீடு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து புதிய UPI PIN ஐ உருவாக்கவும்
- இறுதியாக உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP யை என்டர் செய்து புதிய UPI PIN ன் மூலம் பணவரித்தனையை தொடங்கலாம்.
குறிப்பாக நீங்கள் தவறான UPI PIN ஐ மூன்று முறைக்கு மேல் உள்ளீடு செய்ய முயற்சித்தால் உங்களது PIN reset செய்ய வேண்டிருக்கும். அல்லது 24 மணிநேரத்திற்கு பணத்தினை அனுப்பவோ, பெறவோ முடியாது.