சென்னையில் ஒரு சில இடங்களில் மின் பராமரிப்பு பணிக்காக மின் தடை ஏற்பட உள்ளது. அதன்படி இந்தப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பரமாரிப்பு பணிகள் விரைவாக முடியும் பட்சத்தில் 1 மணிக்கு முன்பாக கூட மின் விநியோகம் மீண்டும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா சாலையில் அருணாச்சலம் தெரு, சிந்ததிரிபேட்டை, போலிஸ் குடியிருப்பு, ராமசாமி தெரு, எல் ஜி என் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை உள்ளது. 


மயிலாப்பூரில்  இருசப்பா, ஜேஜேகான், தேவராஜ் முதாலி, சூரப்பன், கற்பகம் அவின்யூ உள்ளிட்ட பகுதிகளின் முதல், இரண்டு மற்றும் மூன்றாவது தெரு, பாலாஜி நகர், சிஐடி காலனி, ஹேடாஸ் ரோடு, நுங்கம்பாக்கம் பிரதான சாலை, கரீம் சுபேதார் சாலை ஆகிய இடங்களிலும் இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. 





மாதவரத்தில் கேகேஆர் நகர், அம்பேத்கர் நகர், திருவள்ளூவர் தெரு, அண்ணா நகர் மற்றும் சத்திய ராஜ் தெரு ஆகிய பகுதிகளில் இன்று மின் தடை உள்ளது. அதேபோல் ஆவடியின் ஜேபி நகர், பவர் லைன் ரோடு, கணபதி நகர், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பராமாரிப்பு பணி காரணமாக மின் தடை உள்ளது. 


முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம் : காவலர்களால் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா?


புழல் பகுதியின் அழகிரி தெரு, என்.எஸ்.சி போஸ் தெரு, தண்டல் காலனி, அருண் உல்லாசா நகர், பாபா நகர், சாமியார் மடம், வடகரி உள்ளிட்ட இடங்களில் மின் தடை உள்ளது. பட்டாபிராம் பகுதியின் காக்கான்ஜி நகர், ஷாஸ்திரி நகர், பாபு நகர், அம்பேத்கர் நகர், நியூ இந்திரா நகர், லக்‌ஷ்மி நகர், பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட உள்ளது. அதேபோல சோத்துப்பெரும்பேடு பகுதியின் புதூர், கும்மானூர், அங்காடு,கோக்குமடு,அருமண்டை, திருநெலை உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளது. 




புதிய ஆட்சி மாற்றத்துக்கு வந்த பிறகு பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடை  மீண்டும் வந்துள்ளது எனப் பலர் தெரிவித்து வந்தனர். அதற்கு கடந்த 9 மாதங்களாக மின்சார வாரியம் எந்த பராமரிப்பு பணியும் செய்யவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இந்தப் பராமரிப்பு பணிகள் சரியாக செய்யப்பட்டிருந்தால் இந்த நிலை தற்போது ஏற்பட்டு இருந்திருக்காது. இந்த பணிகளை விரைவாக முடித்தால் மின் தடை எதுவும் இருக்காது என்று அவர் கூறியிருக்கிறார்.


மேலும் படிக்க: Chennai Metro on Covid19: யூஸ் பண்ணாத பாஸ் வெச்சிருக்கீங்களா... மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்!