SIM Verification Rule: அபராதம்...கடினமாகும் விதிமுறைகள்...சிம் கார்டு வாங்க இவையெல்லாம் முக்கியம்!

மோசடிகளை தடுக்கும் வகையில் புதிதாக சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

Continues below advertisement

SIM Verification Rule: மோசடிகளை தடுக்கும் வகையில் புதிதாக சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

Continues below advertisement

சிம் கார்டு மோசடி:

ஆதிகாலம் முதல் அதிநவீன காலம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அந்த வகையில்,  சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை வழங்குவது, அதன் மூலம் பண மோசடி செய்வது போன்ற குற்றங்கள் தொடர் கடையாகி வருகின்றன.

இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல விதிமுறைகளை கொண்டு வந்ததோடு, மொபைல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள 67,000 டீலர்களை அரசாங்கம் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும், மோசடியாகப் பெறப்பட்ட 52 லட்சம் சிம் கார்டு இணைப்புகளை அரசாங்கம் கண்டறிந்து செயலிழக்கச் செய்தது. கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் 300 சிம் கார்டு டீலர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்கும் வகையில் பல சிம் கார்டுகளை வாங்குவதற்கு விதிமுறைகளை கடினமாக்கி உள்ளது.  

விதிமுறைகள் என்னென்ன?

  • காவல்துறையின் சரிபார்ப்புக்கு பின்னரே சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு நிறுவனங்கள் சிம் கார்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் 
  • காவல்துறை சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு ​புதிய விற்பனையாளர்கள் (மொபைல் சிம் கார்டுகளின்) செல்ல வேண்டியது கட்டாயம். விதிகளை மீறுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
  • தொழில்  நிறுவனங்களின் கேஒய்சி மற்றும் சிம் வாங்கும் தனிநபரின் கேஒய்சியும் சரிபார்ப்பு செய்யப்படும். 
  • வணிக இணைப்புக்காக மொத்தமாக சிம்  கார்டு வாங்கும்போது, வணிக அமைப்புக்கு பதில் இனி தனி நபர் அடையாள சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
  • ஏற்கனவே உள்ள எண்ணில் புதிய சிம்மிற்கு விண்ணப்பிக்கும்போது  வாடிக்கையாளர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும்.
  • மொபைல் எண்ணின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், 90 நாட்கள் முடியும் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் அந்த எண் ஒதுக்கப்படக் கூடாது.
  • புதிதாக சிம் கார்டு வாங்கும் நபரின் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட  வேண்டியது அவசியம். இதன் மூலம் தனிநபர்கள் ஒன்பது சிம்கள் வரை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க 

CM Stalin: அப்படிபோடு...! மீனவர்கள் மாநாட்டில் முத்தான 10 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

Continues below advertisement
Sponsored Links by Taboola