இந்த கொரோனா தொற்று சூழலில் பல ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய புதிய மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இந்திய சந்தையில் பல போன்கள் அறிமுகமாகி வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் தங்களுடைய பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
சாம்சங் எம் 32
ஏற்கனவே வெளியான சாம்சங் எம் 31 மடலின் அப்கிரேட் வெர்சன் தான் இந்த சாம்சங் எம் 32. நேற்று ஜூன் 21ம் தேதி இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட் போன் வரும் ஜூன் 28ம் தேதி முதல் அமேசானில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போன் 6000mAh பேட்டரி திறன்கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் 15,000 ரூபாய், என்ற விலையில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது என்று இணையத்தில் தகவல் வெளியாகி வருகின்றது. முன்புறம் கிளாஸ், பிளாஸ்டிக் பிரேம் மற்றும் பிளாஸ்டிக் பின்புறம் கொண்டு சாம்சங் எம் 32 உருவாக்கப்பட்டுள்ளது. சூப்பர் அமோல்ட் டிஸ்பிலே கொண்ட இந்த போன் 6.4 இன்ச் திரையளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Mi 11 Lite Launch | மூன்று வண்ணங்களில் Mi 11 Lite : அப்டேட் கொடுத்த ஜியோமி நிறுவனம்..!
4 ஜி.பி. RAM மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜி.பி. RAM மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வகை மடல்களாக வெளியாகும் இந்த ஸ்மார்ட் போனின் முன்புற மெயின் கேமரா 64 மெகா பிக்சல் கொண்டுள்ளது. மேலும் மூன்று கேமெராக்கள் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி திறன்கொண்ட இந்த போனில் 20 மெகா பிக்சல் செல்ஃபீ கேமரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக சாம்சங் நிறுவனம் அளிக்கும் பிளாக் மற்றும் லைட் ப்ளூ நிறத்தில் இந்த போன் வெளியாகும். மேலும் எம் 31எஸ் மாடலில் உள்ளதுபோல கைரேகை சென்சார் போனின் பக்கவாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.