இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மாட்ஃபோன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. மிகவும் பிரபலமான ஸ்மாட்ஃபோன் நிறுவனமான சாம்சங் ‘Samsung Galaxy M34 5G;’ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் பிராண்டிற்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்த நிறுவனம் 5ஜி மாடல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள்
உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள சாம்சங் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் போன் விற்பனை நிறுவனமாக உள்ளது. ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி கணினி, டேப், இயர் போன் உள்ளிட்ட சாதனங்களை சந்தையில் கொண்டுள்ளது. இந்நிலையில் தான், இந்திய சந்தையில் தனது மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்ஃபோன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் வரிசையில் தற்போது சம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனை அனைவரும் வாங்க கூடிய விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பயனாளர்களை கவரும் வகையில் புதிய வசதிகளுடன் ஸ்மார்ஃபோன்களை விற்பனை செய்து வருகிறது.
இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றை காணலாம்.
- 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி AMOLED டிஸ்பிளே, Exynos 1280 சிப்செட், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த மாடல் கிடைக்கிறது.
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா,; அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.
- ’செல்ஃபி’ கேம்ராவை பொறுத்தவரையில் 13 மெகாபிக்சல் - க்ளாரிட்டியாக் ஃபோட்டு எடுக்க வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது.
- ஸ்மாட்ஃபோன்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது எவ்வளவு நேரம் பேட்டரி இருக்கும். இதில், 6,000mAh பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
- இரண்டு சிம் ஸ்லாட் கொண்டது.
- டைப் -சி சார்ஜிங், டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் என பல வசதிகளை கொண்டுள்ளது.
- வீடியோ எடுக்கும்போது ஷேக் ஆகாமல் இருக்கும் வகையிலான செட்டிங்க் கொண்டுள்ளது.
- சாம்சங் வால்ட் இதில் உள்ளது.
- தனிநபர் தகவ்ல்களை பாதுக்காக்கும் நோக்கில் இந்த மாடலில் ‘Knox Security' வழங்கப்பட்டுள்ளது.
எப்போது முதல் விற்பனைக்கு வருகிறது?
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி மாடல் வரும் 15-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. நீலம், கருப்பு உட்பட மூன்று வண்ணங்களில் கிடைக்கும். 6 ஜி.பி. ரேம் கொண்ட போனின் விலை ரூ.18,999 . 8 ஜி.பி. ரேம் கொண்ட போனின் விலை ரூ.20,999. இதற்கான அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்களேன்! -Galaxy F54 5G India: கேலக்ஸி எஃப்54 5ஜி.. இந்தியாவில் வெளியாகும் தேதியை அறிவித்த சாம்சங்.. விவரங்கள் இதோ..!