ஐஓஎஸ்க்கு ஆப்பிள் என்றால், ஆண்ட்ராய்டுக்கு சாம்சங் என்ற நிலை இருந்தது. புதுப்புது தொழில்நுட்பங்களை சந்தைக்கு கொண்டு வருவதில் சாம்சங் நிறுவனமே முன்னோடி. அந்த வகையில் தற்போது சாம்சங் மடித்து கைக்குள் வைத்துக்கொள்ளும் வகையிலான செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வகையான மடிப்பு செல்போன்களின் மாடல்களை சாம்சங் வெளியிட்டுள்ளது. அதன்படி Galaxy Z Fold 3 மற்றும் Galaxy Z Flip 3 ஆகிய மாடல்கள் வெளியாகியுள்ளன. Galaxy Z Fold 3 என்பது பக்க வாட்டில் மடித்துக்கொள்ளும் வகையில் உள்ளது. அதுவே Galaxy Z Flip 3 மாடலானது சென்போனைஇரண்டாக மடித்து கைக்குள் அடக்கி வைத்துக்கொள்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. கைக்குள் சிறிய பெட்டி போல இருக்கும் செல்போனை தேவைப்பட்டால் ஓபன் செய்துகொள்ளலாம். மடித்து வைத்திருந்தாலும் மெசேஜ், நேரம் போன்ற நோட்டிபிகேஷன்களை தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்பம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.


 பார்ப்பதற்கு சிறியதாகவும் அழகாகவும் தெரியும் Flip 3 மாடல் ரசிகர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான இரண்டு மாடல்களுக்குமே வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களுக்கு சிறப்பான டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக வெயில் நேரத்திலும் தெளிவான டிஸ்பிளேவை பார்க்கும் வகையில் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 



Galaxy Z Fold3 5G மாடல்12 ஜிபி ரேம்+256 ஜிபி மெமரியுடனும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரியுடனும் கிடைக்கிறது. ரேம், மெமரிக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் Galaxy Z Flip3 5G மாடல் 8ஜிபி ரேம்+128ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம்+256ஜிபி மெமரி ஆகிய மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Galaxy Z Fold3 5G:


பக்கவாட்டில் மடிக்கக் கூடிய இந்த மாடலின் மெயின் ஸ்கிரின் 7.6 இன்ச் ஆகவும், கவர் ஸ்கிரீ 6.2 இன்ச்சாகவும் உள்ளது. இந்த மாடல் போன் 271 கிராம் எடை கொண்டது. கேமராவை பொருத்தரை பின்பக்கத்தில், வைட், அல்ட்ரா வைட், டெலிபோட்டோ என 3 வகையான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றுமே 12 மெகாபிக்சல் கொண்டவை. முன்பக்க கேமராவை பொருத்தவரை மெயின் ஸ்கிரீனின் 4 மெகாபிக்ஸ்சல் கொண்ட கேமராவும், கவர் ஸ்கிரீனில் 10 மெகாபிக்ஸல் கொண்ட கேமராவும் உள்ளது. 4400 mAh கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.


Galaxy Z Flip3 5G:


இரண்டாக  மடித்து கைக்குள் அடக்கி வைத்துக்கொள்ளும் வகையிலான இந்த மாடலின் மெயின் ஸ்கிரீன் 6.7 இன்ச் ஆகவும், மடித்தப்பிறகு 1.9 இன்ச் டிஸ்பிளேவும் கொடுக்கப்பட்டுள்ளது. இது 183 கிராம் எடை கொண்டது. பின்பக்க கேமராவை பொருத்தவரை வைட், அல்ட்ரா வைட் என்ற இரு வகையான கேமராக்கள் 12 மெகாபிக்ஸலுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 10 மெகாபிக்ஸலுடன் கூடிய முன் பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3300 mAh கெபாசிட்டி கொண்ட  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது


விலை நிலவரம்:


பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விலையில் உச்சத்திலேயே இருக்கிறது இரு மாடல்களும். 
Flip3ன் 128GB + 8GBமாடல் ரூ.84999 ஆகவும், 256GB + 8GBமாடல் ரூ.88999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது


Flip3 மாடலை விட Fold3 மாடல் விலை அதிகமாக உள்ளது. 256GB | 12GB மாடல் ரூ.1 லட்சத்து 49ஆயிரத்து 999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதுவே 512 ஜிபி மாடல் ரூ. 157999 ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.