டெக் உலகில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி S21 FE 5G மொபைல் போன் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. ஒன் ப்ளஸ் 9RT மொபைல் போனுக்கு போட்டியாக களமிறங்கி இருக்கும் இந்த சாம்சங் மாடலின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.


விலை: 6GB/128GB, 8GB/128GB, மற்றும் 8GB/256GB என மூன்று மாடல்களில் விற்பனைக்கு வந்திருக்கும் கேலக்ஸி S21 FE 5G மொபைல் போன் ஆரம்ப விலை 52, 031 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மாடல் கலர்: ஓலிவ், லாவெண்டர், வெள்ளை, கிராஃபைட் என நான்கு நிறங்களில் இந்த மாடல் வெளியாக உள்ளது.


டிசைன்: சாம்சங் கேலக்ஸி S21 FE 5G வகை மொபைல போன் 7.9 மிமீ அகலம். ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் வசதி பொருத்தப்பட்டுள்ளது.


கவனிக்க வேண்டியவை: 6.4 இன்ச் FHD டிஸ்ப்ளே, 12MP அல்ட்ரா வைட் கேமரா, 12MP வைட் கேமரா, 8MP டெலிஃபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா. 


மேலும் படிக்க: Online rummy | ஆன்லைன் ரம்மி என்னும் மாயவலை.. எப்படி செயல்படுகிறது தெரியுமா? தப்பிப்பது எப்படி?


சாம்சங் இந்தோனேஷியாவில் இந்த மாடல் போனின் அன்பாக்ஸிங் வீடியோ வெளியாகி இருக்கிறது. 






சாஃப்ட்வேரை பொருத்தவரை, டாப் டயர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 888 அல்லது சாம்சங்கின் எக்ஸைனோஸ் 2100 சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.


ஸ்டோரேஜ் மற்றும் கனெக்டிவிட்டி: 6GB/128GB, 8GB/128GB, மற்றும் 8GB/256GB மாடல்களில், 5G, 4G LTE, GPS/ A-GPS வசதிகளும், Wi-Fi, ப்ளூடூத், NFC மற்றும் USB Type-C போர்ட் வகை சார்ஜிங் வசதியும் உண்டு. 


வெளியாகும் நாள்: ஜனவரி 11-ம் தேதி பொது மக்கள் விற்பனைக்கு வர இருக்கும் சாம்சங் கேலக்ஸி S21 FE 5G மொபைல் போன், முதலில் சாம்சங் இணையதளத்தில் வெளியாக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண