சாம்சங் தனது புதிய Samsung Galaxy S20 FE 5G மாடல் ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. கிளவுட் மின்ட், கிளவுட் லாவெண்டர் மற்றும் நேவி ஆகிய மூன்ற வண்ணங்களில் ஸ்னாப்ட்ராகோன் ப்ராசசர் கொண்டு உருவாகியுள்ளது இந்த ஸ்மார்ட்ஃபோன். சாம்சங் ஃபோன்களில் சிறிய அளவில் காணப்படும் இன்டிஸ்பிலே கைரேகை சென்சார் இந்த போனில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

ஆரம்ப விலையாக 39,999 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விவரக்குறிப்புகள் பின்வருமாறு :

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் உள்ள இந்த போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டு இயங்குகிறது. 6.5 இன்ச் FHD+ பிக்சல் சூப்பர் AMOLED infinity O டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 128GB 6GB ரேம், 128GB 8GB ரேம், மற்றும் 256GB 8GB ரேம் என்று மூன்று வேரியண்ட்களில் ஆண்ட்ராய்டு 10 உருவாகியுள்ளது. மேலும் இந்த போனை ஆண்ட்ராய்டு 11 தளத்திற்கு அப்கிரேட் செய்யமுடியும்.

Meet the new #GalaxyS20FE 5G with Snapdragon processor. It’s made for the HyperFast fans. Upgrade at ₹39999. T&C apply. Buy now: https://t.co/78Rm03t6nl#MadeForFans #Samsung pic.twitter.com/TpaNGp1CPj
— Samsung India (@SamsungIndia) March 31, 2021

32 மெகா பிக்செல் selfie கேமரா மற்றும் முறையே 12,8,12 மெகா பிக்செல் கொண்ட ட்ரிபிள் கேமரா உள்ளது. தண்ணீர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியோடு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் அப்ஷன் சிறப்பு அம்சங்களாக பார்க்கப்படுகிறது.