இறுதியாக பலரும் எதிர்பார்த்த தனது BS6 அப்டேட் இரண்டை ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. குறைந்த அளவில் மாசு உண்டாக்கும் இரண்டு மிடில் வெயிட் பைக்குகளை இந்திய சந்தையில் இரண்டு மாடல்கள்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது. 8.61 மற்றும் 8.88 லட்ச விலையியல் ஹோண்டா CBR 650R மற்றும் ஹோண்டா CB 650R ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு மாடல் பைக்குகளும் இரண்டு நிறங்களில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 2021 ஹோண்டா CB 650R பைக் கேண்டி குரோம்ஸ்பியர் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களில் வெளியாகி உள்ளது. 2021 ஹோண்டா CBR 650R பைக் கிராண்ட் பிரிக் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கும்.
இரண்டு பைக்குகளும் 649cc என்ஜின் கொண்ட நிலையில் ஹோண்டா CB 650R 206 கிலோ எடையும் ஹோண்டா CBR 650R அதைவிட 5 கிலோ அதிக எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று அறிமுகமான இந்த வாகனங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.