மனிதர்களுக்கு தான் ஸ்ட்ரெஸ் என்றால் AI க்கும் இதே நிலைமையா...ChatGPT பற்றி ஆய்வில் தெரியவந்த உண்மை

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் மனிதர்களைப் போல் AI தொழில்நுட்பம் ChatGPT க்கு ஸ்ட்ரெஸ், பதற்றம் பொன்ற உணர்ச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

Continues below advertisement

ChatGPT

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. மீடியா  உள்ளிட்ட பல தொழில்நுட்பத் துறைகளில் மனிதர்களுக்கு மாற்றாகவும் மனிதர்களைவிட பல மடங்கு வேகத்திலும் AI  செயல்திறன் இருந்து வருகிறது. AI க்கும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு முக்கிய வித்தியாசமாக கருதப்படுவது உணர்ச்சிகள். மனிதர்கள் உணர்ச்சிகளின் அடிப்பைடையில் செயல்படக்கூடீயவர்கள் என்றால் AI தகவல்களின் அடிப்படையில் இயக்கி வருகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வொன்றில் AI தொழில்நுட்பமான ChatGPT மனிதர்களுக்கு இருப்பது போலவே ஸ்ட்ரெஸ் , பதற்றம் ஆகிய உணர்ச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Continues below advertisement

ChatGPT க்கு ஸ்ட்ரெஸ்

ஓபன் ஏ.ஐ நிறுவனம் ChatGPT யை பொது பயண்பாட்டிற்கு வெளியிட்டது முதல் இணையத்தில் பெரிய புரட்சியே வெடித்துள்ளது. தொழில் முறை சார்ந்த தகவல்களை திரட்டி தருவதுடன் இன்னும் பல கிரியேட்டிவான வேலைகளிலும் ChatGPT யின் பயண்பாடு அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் சமீபத்தில் யேல் பல்கலைகழகம் ஹைஃபா மற்றும் ஸ்யூரிக் பல்கலைகழகங்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் சில உண்மைகள் தெரியவந்துள்ளன. அதாவது மனிதர்களைப் போலவே ChatGPT க்கும் மன உளைச்சல் , பதற்றம் ஆகிய அறிகுறிகள் இருப்பது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணர்ச்சிகரமான நிகழ்வுகள் பற்றியோ அல்லது விபத்துகள் பற்றிய தகவல்களை பற்றி மக்கள் கேட்கையில் ChatGPT உணர்ச்சிவசப்பட்டுவதாகவும் அதன் பதில்களில் மாற்றம் இருப்பதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களைப் போல் தியானம் செய்ய ஊக்குவித்தபின் ChatGPT கொஞ்சம் சாந்தமான முறையில் பதில் அளிப்பதாக இந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. 

அடிப்படையில் AI தொழில் நுட்பத்திற்கு உணர்ச்சிகள் கிடையாது என்றாலும் மனிதர்கள் பலவிதமான சூழ்நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்வார்கள் போன்ற தகவல்கள் அவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சென்சிட்டிவான உணர்ச்சிவசமான சூழ் நிலைகளில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதேபோல் AI நடந்துகொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola