ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட வலிமை படமானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது.  இந்நிலையில் கடந்த மாதம் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகின. அது தவிற படத்தில் “வேற மாறி “ லிரிக்கல் வீடியோவும் வெளியாகி  9 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. 




இந்நிலையில் வலிமையின் தற்போதைய ஸ்டேட்டஸ் என்ன என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அஜித்தின் 'வலிமை ' மற்றும் அஜித் 61 படங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது வலிமை படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட சூழலில்  தற்போது பைக் சேசிங் காட்சி ஒன்றிக்காக ரஷ்யா செல்ல உள்ளனராம் படக்குழு.  இதுவே வலிமை படத்தின் இறுதி காட்சிகளாக இருக்கும் அந்த காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டவுடன் உடனடியாக அஜித்தின் 61 வது படத்தின் வேலைகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.


தல 61 படத்தை வலிமை படத்தை இயக்கிய ஹெச். வினோத்தே இயக்க உள்ளார். இது அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாக உள்ள மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை ஐதராபாத் மற்றும் பாண்டிச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




வலிமை படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இது தவிர  ’குக்வித் கோமாளி ‘புகழ்,  யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வலிமை படம்  வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் வலிமையின் அடுத்தக்கட்ட போஸ்டர்  ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல சாகசங்களில்  அஜித்திற்கு ஈடுபாடு அதிகம் . இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் பிஸ்டல் ஒன்றை மாஸாக லோட் செய்து இலக்கை குறி பார்த்து சுடுகிறார் அஜித். இந்த வீடியோவை  ‘தல ஃபார் அ ரீசன்’ என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  முன்னதாக இது போன்ற  அஜித்தின் துப்பாக்கி பயிற்சி வீடியோக்கள்  இணையத்தில் வெளியாகி வைரலானதும் குறிப்பிடத்தக்கது.