தொலைத்தொடர்பு நிறுவங்களிலேயே ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக ஜியோ திகழ்ந்து வருகிறது. ஏர்டெல், வோடாஃபோன் என அனைத்தையும் பின்னுக்கு தள்ளி தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இலவச சிம், இலவச டேட்டா, இலவச வாய்ஸ் கால் என தனது இருப்பை காட்டிக்கொள்ள ஆஃபர்களை வாரி இறைத்த ஜியோ ஒரு கட்டத்துக்கு மேல் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்கள் போல் கட்டணத்தை நிர்ணயிக்க ஆரம்பித்தது. 


அதன்படி தற்போது மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அவிழ்த்து விட ஆரம்பித்துள்ளன மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள். அதற்கு சற்றும் குறைந்ததாக இல்லை ஜியோ நிறுவனம். ஒவ்வொரு முறையும் ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு அற்புதமான சலுகைகள் மற்றும் சர்ஃப்ரைஸ்களை வழங்கி வருகிறது.


புத்தாண்டு நெருங்கி வருவதால் தொலைத்தொடர்பு சேவைகள் தனது சந்தாதாரர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் ஜியோ தனது புத்தாண்டு ப்ளானை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரீபெய்ட் திட்டம், ‘ஜியோ ஹேப்பி நியூ இயர் 2022 சலுகை’ என்று அழைக்கப்படுகிறது. 


இந்த திட்டத்தின் கீழ் ரூ.2,545க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் ஒரு வருடத்திற்கு மொத்தம் 547.5 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 1.5 ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். 




இது தவிர, ஜியோ புத்தாண்டு 2022 திட்டத்தின் கீழ், அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா கிடைக்கும்.


இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட ரூ.2,545 பிளானில் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. மொத்த டேட்டாவும் 504 ஜிபி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 2022 ஆஃபரில் கூடுதலாக 29 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் டேட்டாவும் 504 ஜிபியிலிருந்து 547.5 ஜிபியாக உயர்த்தப்பட்டுள்ளது. 


இருப்பினும், இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கு பிறகு இருக்காது. எனவே, இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர், my jio application -ஐ பார்த்து, சலுகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்