நடிகர் விஜய்யின் 6 நண்பர்கள் வட்டாரத்தில் முக்கியமானவர், சஞ்சீவ். சினிமா மற்றும் சீரியல் நடிகராக வலம் வரும் சஞ்சீவ், கல்லூரியில் இருந்து நடிகர் விஜய் உடன் நெருக்கத்தில் உள்ளார். அவர்களது நட்பு, இன்றும் தொடர்ந்து வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் சிறப்பு போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் சஞ்சீவ், அங்கு சிறப்பாக விளையாடி கமல் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
கடந்த வாரம் நடந்த குடும்பத்தார் சந்திக்கும் நிகழ்ச்சியில், சஞ்சீவ் குடும்பத்தினர் வந்து அவரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தினர். அதன் பின் பலருக்கு தெரிந்தது, சஞ்சீவ் மனைவி, பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பது. அழகான இரு குழந்தைகளுடன் எண்ட்ரி ஆன ப்ரீத்தி, சஞ்சீவ் மட்டுமல்லாது, போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசி அங்கிருந்து புறப்பட்டார்.
இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த அவர்களது குடும்பத்தாரிடம், இணையதளங்கள் பல, அடுத்தடுத்து பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இணையதளம் ஒன்றில், ப்ரீத்தியிடம் அவரது வீட்டு அறையில் வைத்து பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில், தனது கணவர் பற்றியும், விஜய்பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் ப்ரீத்தி. இதோ அந்த பேட்டி...
‛‛எங்கள் வீட்டு அறையில் விஜய் காலாண்டர் ஒன்று இருக்கும். காலையில் எழுந்திருக்கும் போதே நண்பனை பார்த்த தான் சஞ்சீவ் எழுந்திருப்பார். விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து ஆண்டு தோறும் எங்களுக்கு காலண்டர் வரும். விஜய் அடிக்கடி வீட்டிற்கு வருவார். வாக்கிங் போகும் போதெல்லாம், விஜய் வீட்டிற்கு சஞ்சீவ் போய்விடுவார். அடிக்கடி நண்பர்கள் வெளிநாடு செல்வார்கள். கொரோனாவுக்கு முன்பே மாஸ்க் அணிந்து தான் அவர் நண்பர்களுடன் ஊர் சுற்றுவார். அப்போது அது வேற்றுமையாக தெரிந்திருக்கலாம். இனி மாஸ்க் அணிந்து செல்வதில் பிரச்சனை இருக்காது. எப்படி இருந்தாலும் அவரை கண்டுபிடித்துவிடுவார்கள்; இருந்தாலும் ஊதா கலர் மாஸ்க் ஒன்று அவரிடம் உள்ளது. அதை மாட்டிக் கொண்டு, ஆல்டோ காரில் மனிதர் புறப்பட்டு விடுவார்.
அவரிடம் அதற்காகவே ஒரு ஆல்டோ கா் உள்ளது. சஞ்சீவ், எங்கள் வீட்டில் நன்கு உறங்குவார். உறங்கும் போது அவர் மீது ஏறி மிதிப்பேன். கிள்ளிவிடுவேன். அவர் கத்தினால், வீடே அலறும். சில நேரம் அவர் அமைதி காத்துவிடுவார்,’’ என்று ப்ரீத்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்