4G வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் பயனாளர்களுக்காக பிரத்யேகமாக மூன்று புதிய டேட்டா ப்ளான்களை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இந்த டேட்டா ப்ளான்கள் வெவ்வேறு டேட்டா வரம்புகளுடன் கிடைப்பதுடன், அவற்றின் தொடக்க விலை 249 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க விலையான 249 ரூபாய்க்கு 30GB டேட்டா வழங்கப்படுகிறது. 


வர்த்தகம், சிறுதொழில் முதலான பணிகளை மேற்கொள்வோரைக் குறிவைத்து இந்த மூன்று புதிய டேட்டா ப்ளான்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இவை ஒரு மாத வேலிடிட்டி கொண்டவை. மேலும், ஒரு மாதம் லாக் இன் பீரியட் வழங்கப்படுகிறது. இது 4G வயர்லெஸ் டாங்கில் பயன்படுத்துவோருக்குப் பிரத்யேகமாக வழங்கப்படும் சலுகை என்பதால் இதில் வாய்ஸ் கால்கள், எஸ்.எம்.எஸ்கள் முதலானவை வழங்கப்படவில்லை. 


ரிலையன்ஸ் ஜியோ புதிதாக 4G வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் பயனாளர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய திட்டங்களின் சிறப்பம்சங்களை இங்கே கொடுத்துள்ளோம்... 



1. 249 ரூபாய் - ஒரு மாத வேலிடிட்டியுடன் 30GB டேட்டா
2. 299 ரூபாய் - ஒரு மாத வேலிடிட்டியுடன் 40GB டேட்டா
3. 349 ரூபாய் - ஒரு மாத வேலிடிட்டியுடன் 50GB டேட்டா


இந்த மூன்று ப்ளான்களுடன் ஜியோ பயனாளர்கள், ஜியோஃபை என்று அழைக்கப்படும் 4G ஹாட்ஸ்பாட் டாங்கிளையும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த ப்ளான்களின் குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்கான டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, அதன் வேகம் 64kbps ஆக குறைத்து வழங்கப்படும். 


புதிதாக ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள G ஹாட்ஸ்பாட்டில் ஒரு நானோ சிம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 6 மணி நேரம் வரை தொடர்ந்து இணையத்திற்காகப் பயன்படுத்தலாம். இதில் 2300mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதைப் பயன்படுத்தும் போது, இணையத்தின் வேகம் சுமார் 150Mbps கிடைக்கிறது. இந்த ஹாட்ஸ்பாட் டாங்கிளில் ஒரே நேரத்தில் 10 டிவைஸ்கள் வரை கனெக்ட் செய்ய முடியும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண