ராஜநாகம்..
இந்தியாவிலுள்ள கோட்டாவில் உள்ள ஒரு ரயில்வே பேனல் அறைக்கு திடீரென அழைக்கப்படாத விருந்தினர் ஒருவர் வருகை தந்தார், அது நிச்சயமாக நீங்கள் நினைப்பது போன்ற விருந்தினர் இல்லை. அது 6 அடி நீள ராஜநாகம். பேனல் அறையில் ஸ்டேஷன் அதிகாரி அருகில் ராஜநாகம் இருப்பது போன்ற ஒரு ட்வீட் இணையத்தில் வைரலாகி அதிக பார்வையாளர்களைப் பெற்றது. டெல்லி-மும்பை ரயில் பாதையில் கோட்டா பிரிவின் ரவ்தா சாலை ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் பேனலில் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று அதிகாலை 5 மணியளவில் அமைதியாக அமர்ந்திருந்தது. இந்தப் புகைப்படம் தான் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
வைரல்..
பாம்புகள், பொதுவாக, பயங்கரமானவையாகக் கருதப்படுகின்றன, ஆனால் ரயில்வே அதிகாரி நாகப்பாம்புடன் அறையைப் பகிர்ந்துகொண்டதால் ரயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை.
மேசையில் அமர்ந்திருக்கும் நாகப்பாம்பு தவிர, பேனல் அறையை இயக்கும் ரயில்வே அதிகாரி அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்தனர்.
படம் இணையத்தில் பரவத் தொடங்கியது, மேலும் ட்விட்டர் பயனர்கள் அவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர். இந்த புகைப்படம் வைரலானது பயமும் பரவசமும் ட்விட்டரில் சம அளவில் பரவத் தொடங்கின. வைரல் ட்வீட்டும் அதற்கான கமெண்ட்களும் கீழே