விக்ரம் வெளியனது


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 
 ‘விக்ரம்’ படம் இன்று அதிகாலை வெளியானது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படம் வெளியாவதால் மொத்த தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. அத்துடன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் அதிகாலை முதலே சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூடி ஒரே ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியுடன் படத்தை வரவேற்க தயாராக இருந்தனர்.


ரசிகர்கள் கொண்டாட்டம்


சென்னையில் உள்ள ரோகினி, வெற்றி ஆகிய தியேட்டர்களில் அதிகாலை 2 மணி முதலே ரசிகர்கள் கட் அவுட்களை வைத்து, பட்டாசுகளை வைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நெல்லையில் உள்ள பிரபல தியேட்டரான ராம்  சினிமாஸிலும் இதேபோல் கொண்டாட்டம் இருந்தன. கமலின் ரசிகர்கள் தவிர, விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சூர்யா ரசிகர்களும் அவருக்கு கட் அவுட்களை வைத்து படத்தை காண மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்தனர். 


Vikram Review: கொடுத்த பில்டப்புக்கு வொர்த்தா? எப்படி இருக்கு விக்ரம் படம்! நச்சுனு ஒரு ரிவ்யூ!


படம் எப்படி இருக்கு..?


தற்போது படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். நமது ஏபிபி நாடு நிருபர் படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறார். அவர்கள் பல்வேறு விதமான கருத்துகளை கூறிவருகின்றனர்.


 ‘விக்ரம்’ படம் எதிர்பார்த்தைவிட தரமாக இருப்பதாகவும், ஒவ்வொரு சீன்களையும் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும், கமலுக்கு இது கம்பேக் எனவும், படம் முழுவதும் ட்விஸ்ட்கள் இருப்பதால், spoiler-ஐ வெளியிடாமல் இருந்தால் படம் பெரிய ஹிட் என்றும், கேஜிஎஃப்-ஐ சாப்பிட்டுவிடும் என்றும் ரசிகர் ஒருவர் கூறினார்.


படத்தில் சூர்யா வேற லெவல் என்றும், மூன்றாம் பாகம் வந்தால், இதைவிட சூப்பராக இருக்கும் என்றும் மற்றொரு ரசிகர் கூறினார். லோகேஷ் கிளிச்சி...கிளிச்சி தொங்கவிட்டார்.. உற்சாகத்துடன் ஒரு ரசிகர் கூறினார். ஒரு ரசிகர் படம் கொஞ்சம் மெதுவாக செல்வதாக கூறினார். மேலும் பல ரசிகர்களின் கருத்துகளை கீழே காணலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண