Redmi, Stylus ஐ ஆதரிக்கும் புதிய ரைட்டிங் பேடை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.



பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் குழந்தைகள் ஒரு காலத்தில் சிலேட்டும், குச்சியும் கொண்டு சென்றார்கள் . அதன் பின்னர் காகித நோட்டுகள் மட்டுமே போதும் என்றானது. ஆனால் தற்போதையை ஸ்மார்ட் உலகில் கரும்பலகைகள் ஸ்மார்ட்போடாக மாறிவிட , அதற்கு ஏற்றார் போல் குழந்தைகள் எழுதி பழகவும் புதிய ரைட்டிங் பேட் அறிமுகமாக தொடங்கிவிட்டது. ஏற்கனவே சந்தையில் நிறைய குழந்தைகளுக்கான ரைட்டிங் பேட் இருக்கும் நிலையில் , ரெட்மி நிறுவனம் 90 கிராம் எடை மற்றும் 8.5 அங்குல திரை அளவு கொண்ட புதிய ரைட்டிங் பேடை அறிமுகப்படுத்தியுள்ளது.




எந்த தொந்தரவும் இல்லாமல், எளிதாக எழுதவும், அழிக்கவும், மீண்டும் எழுதவும் அழிக்கவும் இதில் செய்ய முடியும். லிமர் லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே (எல்சிடி) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இது கருப்பு நிறத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் , குழந்தைகளின் கண்களுக்கு எரிச்சல் உணர்வையோ , மற்ற கேட்ஜெட்ஸை போல குழந்தைகளின் கண்பார்வைக்கு கேடு விளைவிப்பதாகவோ இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகள் எழுதி பழக மட்டுமல்ல, படங்கள் வரையவும் இந்த ரைட்டிங் பேட் உதவியாக இருக்கும் .  இதற்காக லாக் ஸ்விட்ச் என்னும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை எழுதிய பின்னரோ அல்லது வரைந்த பின்னரோ , அது தவறாகிவிட்டால் இந்த ரைட்டிங் பேடின் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தானை க்ளிக் செய்தால் போதும் அழிந்துவிடும்.







இந்த ரெட்மி ரைட்டிங் பேடிற்கு 3 வகை பேனாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எழுதுவதற்கும் , வரைவதற்கும் குழந்தைகள் பேனாக்களை மாற்றி பயன்படுத்தலாம்.  மேலும் இந்த வகை ரைட்டிங் பேடினை ரெட்மி 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பயன்படுத்தலாம் , அதாவது வீட்டில் அடுத்து செய்ய வேண்டிய வேலையை குறித்துக்கொள்ளவும் , டூடுல்களை உருவாக்கவும் , குறிப்பெடுத்துக்கொள்ளவும் பயன்படுத்தலாம்.






 



ரெட்மியின் புதிய ரைட்டிங் பேட் ஆனது பட்டன் பேட்டரி CR2016 உடன் வருகிறது. இது மாற்றியமைக்கக்கூடிய வகையில் இருக்கும் . இந்த  புதிய ரைட்டிங் பேட் தற்போது 599 ரூபாய்க்கு ரெட்மி அதிகாரப்பூர்வ தளங்களில் கிடைக்கிறது. இதனை ஆடர் செய்பவர்களுக்கு ஒரு ரைட்டிங் பேட் , ஒரு பேனா அதனுடன் விளக்க உரை அடங்கிய ஒரு மேனுவலும் கிடைக்கிறது.