கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள காந்தாரா படத்தை நடிகர் தனுஷ் பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், சப்தமி கவுடா நடிப்பில் வெளியான படம் ‘காந்தாரா’. இப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கன்னட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் தாக்கம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க அதீத ஆர்வம் கொண்டிந்தனர். அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. 






பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.  


ஏற்கனவே இப்படத்தை தலைசிறந்த படைப்பு என பாராட்டிய மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இதன் மலையாள பதிப்பை வாங்கி வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார். தமிழில் இப்படம் நாளை வெளியாகிவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் காந்தாரா படம் அதிகளவில் வசூல் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காந்தாரா படம் உங்கள் மனதை வருடும்!! கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. ரிஷப் ஷெட்டி, உங்களைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும். ஹோம்பேல் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள் .. எல்லைகளைத் தாண்டி தொடருங்கள். படத்தின் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். என தெரிவித்துள்ளார். 


தனுஷின் இந்த பதிவால் தமிழில் டப் செய்யப்படும்  காந்தாரா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.