காலத்திற்கு ஏற்ப அப்டேட் ஆகும் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய புதிய மாடல்களை அடுத்தடுத்து வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் இந்தியாவில் தற்போது சோதனை முயற்சியில் 5ஜி தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் செயலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களும் வரிசையாக 5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கும் மொபைல் போன்களை சந்தையில் இறக்கி வருகின்றன. 


அந்தவகையில் அடுத்த வாரம் முதல் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 டி என்ற மொபைல் போனை அந்நிறுவனம் களமிறக்க உள்ளது. இந்த மொபைல் போன் தான் ரெட்மி நிறுவனத்தின் முதல் 5 ஜி தொழில்நுட்பம் கொண்ட போன். எனவே இந்த மொபைலின் வருகைக்கு பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?




ரெட்மி நோட் 10 டி சிறப்பம்சங்கள்?


தற்போது சந்தையில் உள்ள ரெட்மி போகா எம் 3 ப்ரோ மாடல் மொபைல் போனை போலவே இந்த 10 டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த போன் 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 15,999 ரூபாயில் உள்ளது. ஆகவே ரெட்மி நோட் 10 டியும் அதேவிலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 5ஜியிலும் அதே 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். இதில் டிரிபிள் லென்ஸ் கேமரா, பின் கேமரா 48மெகா பிக்சலும், முன் கேமரா 8 மெகா பிக்சலும் ஆக உள்ளது. அத்துடன் மீடியா டெக் சிப் பயன்படுத்தி இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இதில் 5 ஜி தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்த முடியும். 


 






மேலும் இதில் உள்ள 6.5 இன்ச் டிஸ்ப்ளே முழுவதும் ஹெச்டி தரத்தில் உள்ளது. மற்ற ரெட்மி நோட் போன்களை இந்த முழு ஹெச்டி தான் இதில் மிகவும் முக்கியமான அம்சம். இதில் 1 டிபி வரை ஸ்டோரேஜ் தன்மை கொண்ட எஸ்டி கார்டை போடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு 5ஜி சிம் ஸ்லாட்களும், 2எம்பி மைக்ரோ பிராசசரும் உள்ளது. இந்த போனில் கை ரேகை ஸ்கேன் செய்யும் வசதி மற்றும் 5000 mah கொண்ட வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. 


மேலும் படிக்க:வருகிறது சூரிய புயல்... மொபைல் போன், ஜி.பி.எஸ் வேலை செய்யாது; நாசா எச்சரிக்கை!