சூரியப் புயல் என்பது சூரியனின் செயல்பாடு காரணமாக நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். குறிப்பாக சூரியனின் மேற்பரப்பில் இரண்டு பிரம்மாண்டமான தீப்புலம்புகள் உருவாவதோடு, அதிக திறனுடன் பூமியை நோக்கி வரும் பொழுது, பூமியின் காந்தவிசையுடன் மோதி ஏற்படும் நிகழ்வே சூரியப்புயல் என்றழைக்கப்படுகிறது.  மேலும், SpaceWeather.com வலைத்தளத்தின் படி, புயல் சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து உருவானது. மேலும் சூரியனின் வளிமண்டலத்தில் ஒரு துளைத் திறக்கப்பட்டு பூமியின் திசையில் சூரியக் காற்றின் நீரோட்டத்தைத் தூண்டு வதாகக்கூறப்படுகிறது. குறிப்பாக நாசா தெரிவிக்கும் தகவலின் படி,சூரிய ஒளியின் தாக்கம் பூமியின் சூரிய ஒளி பக்கத்தில் துணை சூரிய புள்ளியை மையமாகக் கொண்டிருக்கும். இதனை X1.5-class flare என வகைப்படுத்தப்பட்டுள்ளது.  தற்பொழுது நாசாவின் தகவலின் படி X 1 என்ற அளவில் தான் சூரியப்புயல் தோன்றுகின்றது.





சூரியப் புயலின் வேகம் மணிக்கு 1.6 மில்லியன் கிலோமீட்டரிலிருந்து அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்தப்புயலின் காரணமாக மக்கள் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது எனவும், தொலைத்தொடர்ப்பு சாதனங்களில் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனக்கூறப்படுகிறது.  குறிப்பாக 100க்கு மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயல்பட்டுவருகின்ற  நிலையில், இந்த சூரியப்புயல் தாக்கத்தின் காரணமாக, அனைத்து தொழில் தொடர்புகளும் பாதிக்கப்படும் என ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. இதன் மூலம் ரேடியோ சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் வானிலை ஆகியவற்றிலும் நேரடியாகப் பாதிப்பினை ஏற்படுத்தும். 


 ரேடியோ சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் வானிலை ஆகியவற்றிலும் நேரடி விளைவை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், பூமியின் காந்தப்புலத்தால் ஆதிக்கம் செலுத்தும் விண்வெளிப் பகுதியில் புயல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மொபைல் போன்களில் சிக்னல்கள் ஏற்படவில்லை. இதோடு ஜி.பி.எஸ் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, டிவி, மின்சாரம் போன்ற இணைப்புகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், பூமியின் காந்தப்புலம் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுவதால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.





மேலும், சூரியப்புயல் காரணமாக வடக்கு அல்லது தென் துருவத்தில் வாழும் மக்கள் இரவில் அழகான வான ஒளியின் காட்சியினைக் காண முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்தப் புயலின் காரணமாக உலகின் சிலப்பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் நாசா வெளியிட்ட தகவலின் படி, இந்த சூரியப்புயலானது எக்ஸ் 1 அளவில் இருப்பதால், மனிதர்களுக்குப்பெரிய அளவில் எந்தவிதப்பாதிப்பும் இருக்காது என நம்பப்படுகிறது. மேலும் சூரியன் வெகு தொலைவில் உள்ளதினால், பெரும்பாலான சூரிய புயல்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை. ஆனால் அனைத்து தொலைத்தொடர்பு சாதனைங்களையெல்லாம் பிளாக் அவுட் செய்ய நேரிடும். இதேப்போன்று தான் கடந்த 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூரியப்புயலில் காரணமாக கனடாவில் தொடர்ந்து 9 மணி நேரம் முற்றிலும் எந்த தொலைத்தொடர்ப்பு சாதனங்கள் இல்லாமல் முற்றிலும் ப்ளாக் அவுட் செய்யப்பட்டிருந்தது குறிபிட்டத்தக்கது.