ஸ்மார்ட்ஃபோன்கள் உலகில் பட்ஜெட் என்றாலே முதலிடத்தில் ஓடிவந்து நிற்பவை ரெட்மி மற்றும் ரியல்மி. பல நிறுவனங்கள் பட்ஜெட் போன்களை வழங்கினாலும் பல்வேறு மாடல்களை பல சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்து ரெட்மியும், ரியல்மியும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்துள்ளன. இந்த நிலையில் ரெட்மி தன்னுடைய அடுத்த மாடல் வெளியீடு பற்றி செய்தியை உறுதி செய்துள்ளது. ரெட்மி 10 இந்தியாவில் வெளியாகும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் எப்போது வெளியிடப்படும் என்ற வெளியீட்டு தேதியை இதுவரை அறிவிக்கவில்லை. ஈது தொடர்பாக சியோமி வெளியிட்டுள்ள டீசர் போஸ்டரில் ரெட்மி 10-இன் சில டிசைனும் தெரியவந்துள்ளது. 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் கேமராவுடன் களம் இறங்குகிறது ரெட்மி 10. 


BSNL-இன் புதிய ப்ரீபெய்டு ப்ளான்கள்; சிறப்புக் கட்டண வவுச்சர்கள்.. என்னெல்லாம் தெரிஞ்சுக்கணும்?


தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள சியோமி, ரெட்மி 10, 3 வண்ணங்களில் வெளிவரும் என்றும், குளோசி பினிசஸ் கொண்டதாக இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போனின் பின்பக்கம் இடது ஓரம் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.கேமரா  செவ்வக வடிவ பேனலில் அமைந்துள்ளது. கேமராவின் அருகில் 50 மெகாபிக்சல் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கேமராக்களுடன் ஃப்ளாஷ் லைட்டும் இடம்பெற்றுள்ளது. ஃபிங்கர் சென்சாரை பொருத்தவரை கேமராவுடன் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. 'விரைவில்' என்ற தகவலோடு ரெட்மி 10 டீசர் முடிவடைகிறது. இந்த போன் 3 வகையான ரேம் வித்தியாசங்களில் வெளிவரும் என தெரிகிறது. அதன்படி 4GB + 64GB, 4GB + 128GB, and 6GB + 128GB என்ற 3 வித மாடல்களில் வெளிவரலாம் என தெரிகிறது. வழக்கமான பட்ஜெட் விலைக்குள் இந்த மாடல் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அப்படியானால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரத்துக்குள் இருக்கலாம்.




உத்தேச சிறப்பம்சங்கள்:


ரெட்மி 10ன் டிஸ்பிளே 6.50 இன்ச் கொண்டதாகவே இருக்கிறது. இது தற்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் அளவையே ஒத்துள்ளது. முன் பக்க கேமராவை பொருத்தவரை 8 மெகாபிக்ஸல் கொண்டதாக இருக்கிறது. இதனால் தெளிவான செல்ஃபியை பயனர்கள் க்ளிக் செய்யலாம். பின்பக்க கேமராவை பொருத்தவரை 50+8+2+2 மெகாபிக்ஸல் கொண்ட 4 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  4GB + 64GB, 4GB + 128GB, and 6GB + 128GB என்ற 3 வித மாடல்களில் வெளிவரலாம். பேட்டரி கெபாசிட்டி 5000 mAh ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. Android 11 ஓஎஸ் கொண்டதாகவும், 1080x2400 pixels ரெசோலேஷன் கொண்டதாகவும் ரெட்மி 10 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கூகுள் போட்டோஸ் யூஸ் பண்ற ஆளா நீங்க? இந்த தகவல் எல்லாம் தெரிஞ்சுக்கோங்க!