BSNL தொல்லைதொடர்பு நிறுவனம் தனது ப்ரீபெய்டு ப்ளான்களில் உள்ள சிறப்புக் கட்டண வவுச்சர்களின் வேலிடிட்டில் மாற்றம் செய்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் குறைய வாய்ப்புள்ளது.
கொரோனா தொற்றுக் காலத்தில் பணியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிந்து வரக்கூடிய நிலையில், அவர்களுக்கு வசதியாக பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்டு ப்ளான்களில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் வாய்ஸ் சலுகைகளுடன் பல ப்ரீபெய்டு திட்டங்களை வழங்கி வருகிறது
ஆனால் அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சராசரி மொத்த வருவாயினை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளதாக அறிக்கைகள் ஊகிக்கின்றன. இதற்காக அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் தனது வருவாயினை அதிகரிக்க வேண்டும் என்பதால் ரூ .49, ரூ .75, ரூ .94 மற்றும் ரூ .106, ரூ .107, ரூ .197 மற்றும் ரூ .397 விலை கொண்ட சிறப்பு கட்டண வவுச்சர்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. இந்தத் திருத்தங்களுடன் கூடிய நடைமுறை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கேரள பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பில் அமலில் இருப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது.
இதன்படி, முதலில் ரூ .49 விலையில் உள்ள நுழைவு நிலை சிறப்பு கட்டண வவுச்சர் 28 நாட்கள் வேலிடிட்டியை இப்போது 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2 ஜிபி இலவச டேட்டா மற்றும் மொத்தம் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதேப்போன்று ரூ .75 ப்ரீபெய்ட் திட்டத்தின் கட்டண வவுச்சர் 60 நாட்கள் வேலிடிட்டியை இப்போது 50 நாட்களாக குறைத்துள்ளது. இந்த பேக் மூலம் எந்த நெட்வொர்க்கிற்கும் 100 நிமிட இலவச வாய்ஸ் கால்ஸ், 2 ஜிபி இலவச டேட்டா பெறலாம். அதேபோல் ரூ 94 STV ப்ரீபெய்ட் திட்டத்தின் கட்டண வவுச்சர் 90 நாட்கள் வேலிடிட்டியை இப்போது 75 நாட்களாக உள்ளது.
மேலும் ரூ.106 மற்றும் ரூ.107 விலை கொண்டத் திட்டங்களில் 100 நாட்களாக இருந்த வேலிடிட்டி தற்போது 84 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்ட வவுச்சர்களும் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் 100 நிமிட இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் 3 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. இதேப்போல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்களாக இருந்த வேலிடிட்டி தற்போது 150 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜிங் மியூசிக் பயன்பாட்டிற்கான சந்தாவை வழங்குகிறது.
இதேபோன்று பி.எஸ்.என்.எல்-இன் ரூ.397 ப்ரீபெய்டு திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு வருடாந்திர திட்டமாகும். இருப்பினும், இப்போது இந்த ப்ரீபெய்டு திட்டம் 300 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கிறது. குறிப்பாக பி.எஸ்.என்.எல்-லின் இந்த கட்டண உயர்வு என்பது ப்ரீபெய்டு திட்டத்தின் விலையினை அப்படியே வைத்திருந்தாலும் அதில் கிடைக்கும் நன்மைகள் குறைக்கப்படுகிறது. எனவே ப்ரீபெய்டு திட்டத்தினால் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் குறைய வாய்ப்புள்ளது.