Realme நிறுவனம் தனது புதிய Realme 8G மாடலை இந்த மாதம் 28-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. மேலும் இந்திய அளவில் MediaTek MT6833 Dimensity 700 5G என்ற சிப்செட் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுவென்ற சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த தகவலை உறுதி செய்துள்ளது ரியல்மி இந்தியா நிறுவனம். MediaTek MT6833 Dimensity 700 5G குறித்து ஏற்கனவே ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளபோதும், அந்த சிப்செட் ரியல்மி 8 5ஜியில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடாமல் இருந்தது ரியல்மி என்பது குறிப்பிடத்தக்கது. 






8.5mm சூப்பர் ஸ்லிம் ஊர்வதுடன் இந்த ஃபோன் இந்திய சந்தையில் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி UI 2.0 OSவுடன் வெளியாகவுள்ளது. 48 மெகாபிக்செல் உள்ளிட்ட மூன்று மெயின் கேமராக்களும் 8 மெகா பிக்செல் முகப்பு கேமராவும் இதில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகும் பல ஸ்மார்ட்ஃபோன்களில் பெரிய அளவில் ஹெட்ஃபோன் வசதிகள் கொடுக்கப்படாத நிலையில் ரியல்மி 8 5ஜி மாடலில் 3.5mm ஹெட் போன் ஜாக் பொருத்தப்பட்டுள்ளது. 






மேலும் கைரேகை ஸ்கேனர் வசதி போனின் பக்கவாட்டில் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. 90Hz ஸ்மூத் டிஸ்பிலே மற்றும் 5000mAh பேட்டரி திறன்கொண்ட இந்த ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் 14 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளது ரியல்மி நிறுவனம்.





இந்நிலையில் இன்னும் மீடியாடேக் 700 ப்ராசஸரையே முழுமையாக அறியாத நிலையில் அடுத்த அதிரடி அறிவிப்பாக ரியல்மி நிறுவனத்தை சேர்ந்த மாதவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் மீடியாடேக் 1200 ப்ராசசர் விரைவில் அறிமுகமாகும் என்றும் கூறியுள்ளார்.