இப்போதெல்லாம் பட்ஜெட் போன் என்றாலே ரூ.15ஆயிரத்தில் இருந்து 20ஆயிரத்துக்குள் என்பதே. செல்போன் நிறுவனங்களும் இந்த விலை இடைவெளிக்குள் சிறந்த அம்சங்களை உள்ளடக்கி செல்போனை இந்திய சந்தையில் களமிறக்கி வருகின்றன. ஆனால் பெரிய சிறப்பம்சங்கள் எல்லாம் வேண்டாம், ஒரு மீடியமான அம்சங்களுடன் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் என்பவர்களுக்கும் சந்தையில் செல்போன்கள் உண்டு. அப்படியான ஒரு சூப்பர் பட்ஜெட் போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி.
4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட Realme C25 மாடல் இந்தியாவில் ரூ.9999க்கு விற்பனையாகிறது. இதில் ஸ்டோரேஜ் அதிகம் கொண்ட, அதாவது 4ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடல் ரூ.10,999க்கு விற்பனையாகிறது.
டிசைன் எப்படி?
Realme C25மாடல் பிளாஸ்டிக் வகை மூடியைக் கொண்டுள்ளது. பின்புறத்திலேயே கேமராவுக்கு கீழே விரல்ரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேட் ஃபினிஷிங் முறையில் மூடி இருப்பதால் அழுந்தப்பிடித்தால் கைரேகை பதிவது போன்ற பிரச்னைகள் இருக்காது.
சிறப்பம்சங்கள்:
வழக்கமான 6.50இஞ்ச் பெரிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. LCD பேனல் டிஸ்பிளே என்பதால் உள்ளே, வெளியே என எந்த இடத்திலும் கண்ணுக்கு தெளிவான டிஸ்பிளேவை கொடுக்கிறது. குறிப்பாக வெயில் நேரத்திலும் பிரைட்னஸ்க்கு ஏற்ப தெளிவான டிஸ்பிளேவாக இருக்கிறது. சார்ஜிங் என்பது சற்று சறுக்கலாக பார்க்கப்படுகிறது. 18W சார்ஜர், 6000 mAh பேட்டரி என்பதால் முழு சார்ஜ் ஏறுவதற்கு 3 மணி நேரங்கள் பிடிக்கிறது. அரை மணி நேரத்தில் 19% சார்ஜ் ஏறுகிறது. கேமிங் செயல்பாடுகளுக்கு இந்த மாடல் போன் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கேம் விளையாண்டால் Realme C25சார்ஜ் வேகமாக இறங்குகிறது. வீடியோவை பொருத்தவரை ஒருமுறை முழு சார்ஜ் போட்டால் 27 மணி நேரம் வீடியோ பார்க்கலாம். இது சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது.
கேமராவை பொருத்தவரை 8mp முன்பக்க கேமரா, 13mp+2mp+2mp பின்பக்க கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கேமராக்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு உள்ளன. ஆனால் அல்ட்ரா வைட் கேமரா இல்லாதது குறைதான். ரூ.10ஆயிரத்துக்குள்ளான போன் என்றாலும் 2X zoom பிரமிக்க வைக்கிறது. 5X சுமாராகவே இருக்கிறது. அதனால் பெரிய பயன் இல்லை. மற்றபடி, ரூ.10ஆயிரத்துக்குள்ளான போன் என்பதால் சிறப்பான கேமரா குவாலிட்டியே கொடுக்கப்பட்டுள்ளது. MediaTek Helio G70 பிராசஸர், ஆண்ட்ராய்ட் 11 OS கொண்டதாக உள்ளது.
ரூ.11ஆயிரத்துக்குள் 128ஜிபி ஸ்டேரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதே Realme C25க்கு பாசிட்டிவான விஷயம். சராசரியான தேவைக்குத்தான் என்று சொல்லும் பயனர்களுக்கு இது சரியான போன். MediaTek Helio G70 பிராசஸர் போதுமான வேகத்தை கொடுக்கிறது.
ஸ்லோ சார்ஜிங், கேமராக்களில் பெரிய அம்சங்கள் இல்லாதது, பெரிய சைஸ் மற்றும் எடை அதிகம் ஆகியவை குறைகளாக உள்ளன. ஆனாலும் விலைக்கு ஏற்ப அதன் அம்சங்கள் இருப்பதால் பட்ஜெட் பிரியர்களுக்கு இந்த மாடல் ஏற்றதாகவே இருக்கும்.