இன்றைய ராசி பலன்கள்: யாருக்கு தன வரவு?

ABP NADU Updated at: 24 May 2021 07:02 AM (IST)

இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.

astro1

NEXT PREV








ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 


சந்திராஷ்டமம்:


ரேவதி

மேஷம்: 


குழப்பமான சூழல் நிலவும் நாள் இன்று. முடிவுகளை எடுக்க தடுமாறுவீர்கள். முதலீடுகளில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் வழி உதவிகள் உண்டு. 0

ரிஷபம்:


நல்ல காரியங்கள் செய்து மகிழும் நாள் இன்று. ஆன்மீக வழி பயணங்கள் இருக்கும். குழந்தைகள் உங்களுடன் மகிழ்வாய் இருப்பார்கள். யாருக்கும் தேவையின்றி ஜாமின் கையெழுத்திட வேண்டாம். 

மிதுனம்:


ஆவலாய் காத்திருந்த காரியத்தில் இன்று ஏமாற்றம் அடையலாம். வீண் எதிர்பார்ப்புகளை தவிர்க்கவும். பண வரவும் தாமதம் ஆகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். எதையும் பொறுமையாக கையாள்வது நன்மை பயக்கும்.

கடகம்:


நீண்ட நாள் எழுதி காத்திருந்த தேர்வு அல்லது பதவி உயர்விற்கான காத்திருப்பில் தேர்ச்சியடையும் நாள் இன்று. மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும். குடும்பத்தார் பக்கபலமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களில் மட்டும் கவனம் தேவை.

சிம்மம்:


உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தார் வழியில் உதவிகள் கிடைக்கும் நாள். வீட்டில் நடைபெறும் நிகழ்வில் உங்கள் பங்களிப்பு முழுமையாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு சிலர் மனம் நோக நடந்து கொள்வார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். 

கன்னி:


தேவையற்ற கோபங்களை தவிர்க்கவும். சக பணியாளர்களுடன் வீண் வாதங்களை தவிர்க்கவும். சொன்ன நேரத்தில் பணவரவு இருக்காது. அதே நேரத்தில் ஓரளவு தன வரவு இருக்கும். உறவினர் வழியில் தொல்லைகள் வரலாம். 

துலாம்:


தேவையற்ற மறதியால் மனஉளைச்சல் ஏற்படலாம். நீங்களும் குழப்பிக்கொண்டு, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் குழப்ப வேண்டாம். மருத்துவ வகையில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

விருச்சிகம்:


உடல் சோர்வாக காணப்படும். வழக்கம் போல பரபரப்பாக இருக்கலாம், ஒரு நாள் ஓய்வு எடுப்பது உடல்நலத்திற்கு நல்லது. செலவுகள் இருக்காது, அதே நேரத்தில் பண வரவும் இருக்காது. பொன், பொருள் வாங்க சேர்த்த பணத்திற்கு வட்டி கிடைக்கலாம். 

தனுசு:


உறவினர் வழியில் தொல்லை வரும். பெற்றோர், சகோதர வழியில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். பண வரவு இருக்கும் அதே வேளையில் தேவையற்ற செலவுகள் இருக்கும். உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்படுவீர்கள். 

மகரம்:


தொழிலில் கடும் போட்டி நிலவும். அதே நேரத்தில் நல்ல வருவாய் இருக்கும். லாபம் 
கொட்டும். இல்லத்தில் மகிழ்ச்சியான செய்தி வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

கும்பம்:


பயணங்கள், விருந்துகள், போக்குவரத்து என சுகம் காணும் நாள் இன்று. செல்லும் இடத்தில் சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சுபச்செலவுகள் வந்து போகும். உறவினர்கள் ஒத்துழைப்பு கிட்டும். 

மீனம்:




இன்பமான நாள். எடுத்த காரியம் வெற்றி பெறும். நன்மைகள் வந்து சேரும். முதலீடுகள் பயனளிக்கும். தனவரவு கூடும். பெற்றோர் வழியில் செலவு ஏற்படலாம். பிள்ளைகள் உடல்நலனில் அக்கறை தேவை.





Published at: 24 May 2021 07:02 AM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.