கொரோன கால ஊரடங்கு வீட்டில் போர் அடிக்கிறதா? கவலை வேண்டாம் உங்களை என்டேர்டைன் செய்ய இதோ தமிழின் 9 திரில்லர் படங்கள் உங்கள் ஓடிடி-யில்...


1) 8 தோட்டாக்கள் (டிஸ்னி+ ஹாட்ஸ்டார் )


இது ஒரு க்ரைம் திரில்லர் படம். படத்தின் கதாநாயகன் ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு குற்ற விசாரணையின் போது தனது துப்பாக்கியை துளைத்து விடுகிறார். அந்த துப்பாக்கி யார் கையில் கிடைக்கிறது, அதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் சஸ்பென்ஸ்.


2) கேம் ஓவர் (நெட்பிலிக்ஸ் )


நடிகை டாப்ஸி நடிப்பில் வெளிவந்த கேம் ஓவர் திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர். முகம் தெரியாத ஒரு சீரியல் கில்லர், கேம் டிசைனர் டாப்ஸி அந்த வில்லனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் இதில் நிறைந்துள்ள மர்மம்.


3) கைதி (டிஸ்னி+ ஹாட்ஸ்டார் )


 நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படம். சிறையில் இருந்து வெளி வரும் கார்த்தி, தனது மகளை காண ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகத்திற்கு செல்ல முயல்கிறார். அந்த ஒரு இரவில் அவர் சந்திக்கும் சவால்கள், இடையூறுகள் என திகிலான ஸ்கிரீன் ப்லே. கதையில் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்போடு நம்மை நகத்தி அழைத்துச்செல்லும்..


4) சைக்கோ (நெட்பிலிக்ஸ் )


உதயநிதி நடிப்பில் வெளிவந்த சைக்கோ திரைப்படம், தலைப்புக்கு ஏற்ப ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர். மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த பெரிதாக பேசப்படாத சிறந்த படம். தனது காதலியை பார்வை குறைபாட்டால் கைவிடும் உதயநிதி, மீண்டும் அவரை மீட்கிறாரா என்பதே கதை.


5) யூ டர்ன் (நெட்பிலிக்ஸ் & அமேசான் ப்ரைம் )


நடிகை சமந்தா நடிப்பில் வெளிவந்த பாடலே இல்லாத திரைப்படம் யூ டர்ன். சமந்தா ஒரு பயிற்ச்சி பத்திரிக்கையாளர், குறிப்பிட்ட ஒரு மேம்பாலத்தில் நடைபெறும் விபத்துகள், இறப்புகள் காரணம் என்ன ? கண்டறிய முயவதில் சந்திக்கும் சிக்கல் தான் திரைக்கதை.


6) ராட்சஷன் (டிஸ்னி+ ஹாட்ஸ்டார் )


விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். பெண்களைக் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்து அவர்களின் இறந்த உடல் பாகங்களை காட்சிப்படுத்தும் மனநோயாளி. காவல் பணியில் உள்ள விஷ்ணு, சைக்கோ கொலையாளியை எவ்வாறு கண்டறிகிறார் என்பதை படம் தொடங்கியது முதல் முடியும் வரை திரில்லிங்காக சொல்லி இருக்கிறார்கள். பலர் பார்த்து இருக்க கூடும், பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.


7) பென்குயின் ( அமேசான் ப்ரைம் )


நேரடியாக ஓடிடி பிளாட்ஃபார்மில் ரிலீஸ் ஆன திரைப்படம். தனது முதல் குழந்தையை இழந்துவிட்டு தவிக்கும் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தொலைந்து போகும் குழந்தைகள். யார் கடத்துகிறார்கள், எதற்காக என வில்லனை நெருங்கும் நேரத்தில், உண்மையான வில்லன் அந்த நபரில்லை என்பது தான் சஸ்பென்ஸ். அப்போ யாரு தான் தன் மகனை கடத்தியது, இது தான் கதை.


8) அந்தகாரம் (நெட்பிலிக்ஸ் )


இது ஒரு வித்தியாசமான சூப்பர் நேச்சுரல், ஹாரர், திரில்லர், ஆகிய வகைகளுக்கு கீழ் வரும் திரைப்படம். பார்வையற்றவர், மன நல மருத்துவர், கிரிக்கெட் பயிற்சியாளர் இவர்கள் மூவரும் எப்படி இணைகிறார்கள், என்ன நடக்கிறது என்பது தான் கதை.


9) விக்ரம் வேதா (டிஸ்னி+ ஹாட்ஸ்டார் )


ஹீரோவா, வில்லனா என்று தெரியாத விஜய் சேதுபதி. போலீஸ் ரோலில் மாதவன். ஊரே விஜய் சேதுபதியை தேடி கொண்டிருக்க, விஜய் சேதுபதி தனது தம்பியை கொன்றவரை தேடுகிறார். மாதவனும் - விஜய் சேதுபதியும் இணைந்து எவ்வாறு சிக்கல்களை அவில்கிறார்கள் என்பது தான் உண்மை.