ரியல்மி நிறுவனம் நார்சோ 30 ஸ்மார்ட்ஃபோனின் புது வேரியன்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 1080 x 2400 பிக்சல் ரெஷல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது
தொழில்நுட்ப யுகத்தில் ஒவ்வொரு நாளும் செல்ஃபோன் தொடங்கி செயலி வரைக்கும் அப்கரடேஷன் நடக்காவிட்டால் அந்த நாள் 'இணைய' நாள் அல்ல என்றாகிவிட்டது.
அந்த வகையில் செல்ஃபோன் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு அன்றாடம் ஏதேனும் ஒருவகை புதிய வேரியன்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றது.
ரியல்மி நிறுவனம் நார்சோ 30 ஸ்மார்ட்ஃபோனின் புது வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
இதே ஃபோன் முன்னதாக 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியன்ட்களில் அறிமுகமான நார்சோ 30 தற்போது 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.13,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழசுக்கும் புதுசுக்கும் என்ன வித்தியாசம்?
நார்சோ 30 புதிய வேரியன்ட்டில் மெமரி மட்டும் தான் மற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய நார்சோ 30 மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 16 எம்பி செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் உள்ளது.
கேமரா வசதி..
ஃபோனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா உள்ளது. இதுதவிர 2 எம்பி சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸும் உள்ளன. இந்த ஃபோனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் உள்ளது. மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் 30 வாட் டார்ட் சார்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நார்சோ ஸ்பெஷிஃபிகேஷன்ஸ் இவைதான்:
* 6.5 அங்குலம் 2400x1080 பிக்ஸ்ல் ஃபுல் ஹெச்டி மற்றும் எல்.சி.டி. டிஸ்ப்ளே ஸ்க்ரீன்
* ஹீலியோ ஜி95 பிராசஸர்
* டூயல் சிம் ஸ்லாட்
* 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
* எஸ்க்ஸ்பேண்டபிள் மெமரி வசதி
* 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
* ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ரியல்மி யுஐ 2.0
* 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
* 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
* 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
* 3.5mm ஆடியோ ஜாக்
* டைப் சி யு.எஸ்.பி.
* 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
* 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி நார்சோ 30 தொடரில் ரியல்மி நார்சோ 30, ரியல்மி நார்சோ 30A ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ நல்ல வரவேற்பைப் பெற்றதால், இந்த புதிய வேரியன்ட்டும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.