பட்ஜெட் ஃபிரண்ட்லி மொபைல்போன்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிறுவனம் ரியல்மி .ரியல்மியின் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மொபைல்போன்கள் தற்போது 15 ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இந்நிலையில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக 5ஜி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ரியல்மி நிறுவனம் உள்ளது. குறைந்த பட்ஜெட்டிலான 5ஜி மொபைல்போன்களை தேடிவரும் பயனாளர்களின் நம்பர் ஒன் சாய்ஸாக தங்கள் நிறுவனம் இருக்க வேண்டும் என்பதே ரியல்மியின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Realme 9i  மாடல் இன்று மதியம் வெளியானது.






சிறப்பம்சங்கள்:
90Hz அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுளது. 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல சத்தத்தை கொடுக்கும் விதமாக இரண்டு ஸ்பீக்கர்கள் கொடுக்கபட்டுள்ளன. 33W அதிவேக சார்ஜரும், 5000mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே 6.6 இஞ்ச் ஆகவுள்ளது. அதாவது 16.7. செமீ ஆகும். இதனால் பெரிய டிஸ்பிளேவாகவே இந்த மாடல் இருக்கும். ப்ராசஸரை பொருத்தவரை Qualcomm Snapdragon 680 Processor கொடுக்கப்பட்டுள்ளது செல்பி கேமராவை பொறுத்தவரை 16மெகாபிக்ஸல் கொடுக்கப்பட்டுள்ளது. கருப்பு, ஸ்கை ப்ளூ என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் 


விலை எவ்வளவு?
இந்த மாடல் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. 4ஜிபி ரேம் + 64 ஜிபிமெமரி கொண்ட மாடல் ரூ.13999க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.15999க்கும் கிடைக்கிறது. இந்த மாடல் போன் வரும் 25 தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ரியல்மி ஸ்டோரிலும், பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்