ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை குறிவைத்து ஆன்லைன் இ-வர்த்தக தளங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் ஆண்டு தோறும் அமேசான் தளம் குடியரசு தினத்தை குறிவைத்து ஒரு சிறப்பு சலுகையை அறிவிக்கும். அதேமாதிரியான சலுகையை அமேசான் நிறுவனம் இந்தாண்டும் அறிவித்துள்ளது. கிரேட் ரீபப்ளிக் டே சேல் என்ற பெயரில் ஜனவரி 17 முதல் 20ஆம் தேதி வரை பல சலுகைகளை அமேசான் தளம் அறிவித்துள்ளது.  




வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆடை வகைகள், பேஷன் பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கைக்கடிகாரங்களுக்கு சிறந்த ஆஃபர்களை கொடுத்துள்ளது அமேசான்.  அனைத்து விதமான பிராண்ட் கைக்கடிகாரங்களுக்கும் இந்த ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. 


அந்தந்த பிராண்டுகளுக்கு ஏற்ப ஆஃபர் உள்ளது. 80% அப்டூ ஆஃபர் வை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சில குறிப்பிட்ட வங்கி கடன் அட்டைகளுக்கு பிரத்யேக ஆஃபர்களும் உள்ளன. மாத தவணை வசதியிலும் விற்பனை உள்ளது.


இந்த தள்ளுபடியில் Timex, citizen, Titan, Fastrack, casio, Fit, Fassil,Sonata உள்ளிட்ட பல பிராண்டுகள் உள்ளன. அதேபோல ஸ்மார்ட் வாட்ச், அனலாக் வாட்ச், ஸ்போர்ட் டைப் போன்ற பல டிசைன்களும், மாடல்களும் உள்ளன. குறைந்தபட்சம் ரூ.150ல் இருந்தே கைக்கடிகாரங்கள் விற்பனையில் உள்ளன. பிராண்டுகளுக்கும், தரத்துக்கும் ஏற்ப கைக்கடிகாரங்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் வாட்சை பொறுத்த வரை நல்ல ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.


Apple Watch SE தற்போது ரூ.26900க்கு விற்பனை ஆகிறது. இதன் முந்தைய விலை ரூ.32900 ஆகும். ஆனால் இது அனைத்து வண்ண ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் பொருந்தாது.


Mi Band 6 கடிகாரத்தை பொறுத்தவரை ரூ.2999க்கு விற்பனையாகிறது. இதன் முந்தைய விலை ரூ.3499 ஆகும். Mi Band 6, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகும்.


Samsung Galaxy Watch4


இப்போது ரூ.23680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தள்ளுபடி இல்லாதபோது இதன் விலை ரூ.26999 ஆகும்.கிட்டத்தட்ட 3319 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல Noise, Amazfit போன்ற நிறுவன ஸ்மார்ட் வாட்சுகளுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண