1. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு
2. உலக புலழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கருபாயூரணி கார்த்தி முதல் பரிசை வென்று காரை பரிசாக பெற்றார்.
3. தூத்துக்குடியில் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாகம்பிரியாள் பற்றி வீரபாண்டிய புலவர் எனும் சங்கரமூர்த்தி புலவர் இயற்றிய "ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத் தமிழ்" என்ற நூல் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

4. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் ஆய்வு
5. தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த பக்தர்கள் கடற்கரை பகுதியில் கடலில் நீராடி கோபுர தரிசனம் சென்றனர்.
6. நெல்லை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி குறைப்பதற்கும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும் தனிக் கவனம் செலுத்தப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் துரை குமார் தெரிவித்துள்ளார்.
7. திண்டுக்கல் புளியராஜக்காபட்டியில் வீரர் பாதுகாப்புடன் ஒரு குடும்பத்தினர் பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது போன்ற நடுகல் கண்டெடுத்துள்ளனர்.
8. தேனி மாவட்டத்தில் தூய்மை பாரத திட்டம் மூலம் 2022ம் ஆண்டிற்கான திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத முன் மாதிரி கிராமங்களாக போடி ஒன்றியத்தில் சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம் ஆகியவை தேர்வு செய்ய பட்டுள்ளன.
9. பெரியகுளம் காவல் நிலையத்தில், 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதானதால், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
10. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்த 10 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் காசி நகரை சேர்ந்த 60 வயது முதியவர் ராஜசேகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!