ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சந்தையில் எந்தெந்த புதிய மொபைல் போன்கள் சந்தைக்கு வருகிறது என்பது மக்களிடைய பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும். இதனால் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய சிறந்த மாடல்கள் மற்றும் பட்ஜெட் விலையில் இருக்கும் மாடல்கள் ஆகியவற்றை ஜனவரி மாதம் சந்தையில் இறக்கி வாடிக்கையாளர்களை கவரும். அந்தவகையில் இந்தாண்டு ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய மாடலை அடுத்த வாரம் சந்தையில் இறக்க உள்ளது. அந்த மாடலின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


 


ரியல்மீ-யின் அடுத்த புதிய மாடல் என்ன? 


ரியல்மீ நிறுவனத்தின் அடுத்த புதிய மாடல் ரியல்மீ 9-ஐ போன் தான். இந்த மாடல் பட்ஜெட் விலையில் அமைந்துள்ளது. இதனால் சாம்சங், ஓப்போ, ரெட்மீ போன்ற மாடல்களுக்கு அதிக சவால் அளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இந்த மொபைல் போனின் விலை மற்றும் இதன் சிறப்பு அம்சங்கள் பலரை கவரும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


ரியல்மீ 9-ஐ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


 


ரியல்மீ -9 ஐ போனில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுள்ளது. அத்துடன் பின் கேமரா 50 மெகாபிக்சலும்,செல்ஃபி கேம்ரா 16 மெகாபிக்சலும் கொண்டுள்ளது. இந்த போனில் 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி 33 வாட் வேகமாக சார்ஜிங் செய்யும் வசதியுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் ஸ்நாப்டிராகன் பிராசஸர் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த போனில் இருக்கும் 6 ஜிபி ரேமை 11 ஜிபி ரேமாகவும் மாற்றும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ரில்யமீ 2.0 UI உடன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் இதில் இடம்பெற்றுள்ளது.  




ரியல்மீ 9-ஐ எப்போது வெளியாகிறது? இந்த போனின் விலை என்ன?


ரியல்மீ 9-ஐ வரும் 18ஆம் தேதி காலை 12.30 மணிக்கு சந்தையில் விற்பனைக்கு வர உள்ளதாக ரியல்மீ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனின் விலை 14,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் போன்களின் விலையில் வருவதால் இதற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கும் ஐ போன்.. களமிறங்கும் SE மாடல்! என்னவெல்லாம் இருக்கும்?