மிகுந்த எதிர்பார்பிற்கு மத்தியில் பட்ஜெட் மொபைல் பிரியர்களின் ரியல்மி நிறுவனம் தனது அடுத்த படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று  மதியம் 12.30 மணிக்கு  இதற்கான லைவ் ஸ்ட்ரீமிங்கை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியிருந்து. நிகழ்ச்சியின் போது Realme8i மற்றும் Realme 8s ஆகிய மொபைல்போன்களை அறிமுகப்படுத்தியது. மொபைல்போன்கள் மட்டுமல்லாது ரியல்மி நிறுவனத்தின் முதல் டேப்லெட்டான Realme pad  மற்றும் Cobble மற்றும் Pocket என பெயர் கொண்ட சிறிய ப்ளூடூத் ஸ்பீக்கரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றுள் மொபைல்போன் மற்றும் டேப்லெட்டின் வசதிகள் குறித்து பார்க்கலாம்.



 Realme8s 5G வசதிகள் :




    • 6.6 இன்ச் டிஸ்ப்ளே வசதி

    • 180Hz  தொடுதிரை தரம் மற்றும்  120Hz ரெஃபிரஸ் தரம்

    • 2400*1080 HD ரெசலியூசன்

    • உலகின் முதல் டைமன்சிட்டி 5ஜி புராஸசர்

    • ஹோல் பஞ்ச் வசதி கொண்ட செல்ஃபி கேமரா

    • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 64 மெகாபிக்சல்  கொண்ட மூன்று பின்புற கேமரா

    • 4ஜிபி ரேம் , 64gb+128gb, 32gb+128gb  நினைவக திறன்

    • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    • 4ஜியை ஒப்பிடுகையில் 700% அதிவேக 5ஜி வேகம்

    • ஒரே நேரத்தில் வைஃபை மற்றும் 5ஜி சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வசதி.

    • இரண்டு சிம் வசதி

    • மொத்த எடை  191 கிராம்

    • ஊதா  மற்றும் நீல நிறத்தில் அறிமுகமாகியுள்ளது







 Realme 8i வசதிகள்:




    •  6.6 இன்ச் டிஸ்ப்ளே வசதி

    • 80Hz  தொடுதிரை தரம் மற்றும்  120Hz ரெஃபிரஸ் தரம்

    • மீடியாடெக் ஹீலியோ ஜி96 புராஸசர்

    • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி

    • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்சல்  கொண்ட மூன்று பின்புற கேமரா

    • ஒரே நேரத்தின் முன்பக்க மற்றும் பின்பக்க கேமராவில் வீடியோ எடுக்கும் வசதி

    • பிரவுன் கலந்த பிளாக் மற்றும் நீ நிறங்களில் கிடைக்கிறது.







Realme pad: 



  • 10.4 இன்ச் WUXGA+ (2,000x1,200 பிக்சல்கள்)திரை

  • மீடியாடெக் ஹீலியோ ஜி80 புராஸசர்

  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7100 எம்ஏஎச் பேட்டரி

  • 8 மெஹா பிக்சல் செல்ஃபி மற்றும் பின்பக்க கேமரா

  • இரவு மற்றும் பகல் மோட்

  •  400g எடை

  • கிரே மற்றும் கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது.