தனியுரிமைக் கொள்கையினை ஏற்காதவர்கள் வாட்ஸ்-அப் இல் இருந்து முறையாக வெளியேறுவது எப்படி?

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸப் , தனது புதிய தனியுரிமைக்கொள்கையினை அமல்படுத்தியுள்ளது. இந்த கொள்கையினை ஏற்றுக்கொண்ட பயனாளர்கள் மட்டுமே தொடர்ந்து வாட்ஸப் சேவையினை பயன்படுத்த முடியும்.  தவறினால் நாளைடைவில் சில வசதிகளை பயன்படுத்த இயலாது.  இந்நிலையில் வாட்ஸப்பின் புதிய தனியுரிமை கொள்கையினை ஏற்க்காத பல பயனாளர்கள் அந்த செயலியை விட்டு வெளியேறி  டெலிக்ராம், சில்னல் போன்ற செயலிகளில் தங்களின் கணக்குகளை தொடங்கியுள்ளனர். வாட்ஸப்  செயலியினை விட்டு வெளியேற விரும்பும் பயனாளர்கள் சாதாரணமாக செயலியை நீக்கிவிட்டு வெளியிறினால் , அவர்களது தகவல்கள் முற்றிழுமாக அழியாது. மாறாக‌ அது வாட்ஸப் சர்வரிலேயே தங்கிவிடும் . எனவே அதனை விட்டு நிரந்தரமாக வெளியேறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.




"Delete"  செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை :



  • முதலில் உங்கள் வாட்ஸப் செயலியை திறந்துக்கொள்ளவும் .அதில் Settings வசதியை தேர்வு செய்ய வேண்டும்.




  • பிறகு Account  என்ற  வசதிக்குள் சென்று , அதில் Request account info  என்பதை க்ளிக் செய்துக்கொள்ள வேண்டும்.



  • பிறகு அங்கு கொடுக்கப்பட்டிருக்கும்  "Request Report "  என்பதை க்ளிக் செய்தால் உங்களின் புகைப்படங்கள் , குறுஞ்செய்தி உள்ளிட்ட  தகவல்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் .


மேலும் உங்கள் நண்பர்களுடனான உரையாடல்களை பதிவிறக்க செய்ய, அர்களது உரையாடல் பெட்டியை திறந்து , வலதுபுறத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும் அதில் கொடுக்கப்பட்டுள்ள , "export chat" என்ற வசதியின் மூலமாக பதிவிறக்கம் செய்து , கூகுள் ட்ரைவ் போன்ற பிற சேமிப்பு மென்பொருளுக்கு அனுப்பிக்கொள்ளலாம்.

 


நிரந்தரமாக Delete செய்வது எப்படி?


  • முதலில்  Settings வசதியை தேர்வு செய்ய வேண்டும். பிறகு  Account > Delete my account என்பதை க்ளிக் செய்யவும்.



  • பிறகு உங்களின் 10 இலக்க வாட்ஸப் எண்ணினை பதிவிட்டு  Delete my account என்பதை க்ளிக் செய்யவும்.



  • பிறகு  நீங்கள் வெளியேற விரும்புவதற்கான காரணங்களை பதிவிட்டு,  Delete my account என்பதை க்ளிக் செய்யவும்.


தற்போது நீங்கள் நிரந்தரமாக வாட்ஸப் செயலியை விட்டு வெளியேறி விட்டீர்கள்.

 

முன்னதாக  வாட்ஸப் தனது தனியுரிமைக்கொள்கையில், பயனாளர்களின் வங்கி பரிமாற்றம், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் என்ற அறிவிப்பே பயனாளர்களின் அதிருப்திக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 

இதுவரையில்  தனியுரிமையை ஏற்காத பயனாளர்களுக்கு "நோட்டிஃபிக்கேஷன் " மூலமாக நினைவூட்டலை அளிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தனியுரிமையை ஏற்காத‌ பயனாளர்கள் மே 15 ஆம் தேதிக்கு  பிறகு  வாட்ஸப் கணக்குகளின் சில வசதிகளை  பெற முடியாது. பயனாளர்கள் தொடர்ந்து வெளியேறினாலும் அதனை கண்டுக்கொள்ளாத வாட்ஸப் தனது நிலைப்பாட்டில்  தீர்க்கமாக   இருப்பது குறிப்பிடத்தக்கது.