தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்த உத்தரவில், “காத்திருப்போர் பட்டியலில் இருந்த முனைவர் பிரதீப் வி பிலிப் ஐ.பி.எஸ்., சென்னை ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் டி.ஜி.பி/ இயக்குநராக நியமிக்கப்படுகிறார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த முனைவர் ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ்., சென்னை ஆயுதப்படையின் ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., சென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.




மதுரை தெற்கு மண்டல ஏ.டி.ஜி.பி. அபஷ்குமார் ஐ.பி.எஸ்., சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எச்.எம்.ஜெயராம் ஐ.பி.எஸ்., தமிழ்நாடு சீருடைப்பணி தேர்வாணையத்தின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர்.தினகரன் ஐ.பி.எஸ்., சென்னை பொருளாதார குற்றப்பிரிவின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த முனைவர் ஜெ.லோகநாதன் ஐ.பி.எஸ்., சென்னை ஆயுதப்படையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. ராஜேந்திரன் ஐ.பி.எஸ்., தொழில்நுட்ப பிரிவு டி.ஜ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த முனைவர் பா.மூர்த்தி ஐ.பி.எஸ்., சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. செந்தில், தூத்துக்குடி, பேரூராணியில் உள்ள காவலர் தேர்வு பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.


காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. மகேஸ்வரன், மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. அற. அருளரசு ஐ.பி.எஸ்., சென்னை, சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சரவணன் ஐ.பி.எஸ்., சென்னை நிர்வாகப்பிரிவு ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. ராஜா, சென்னை வணிக குற்ற விசாரணைப் பிரிவு, சி.ஐ.டி.யின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. டி.பி.சுரேஷ்குமார், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.