மேலும் இந்த ஸ்மார்ட் போன் போக்கோ நிறுவனத்தின் Flagship மாடல் போனாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் இரண்டாவது 5 ஜி ஸ்மார்ட்போன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே போக்கோ நிறுவனம் அண்மையில் தங்களுடைய போக்கோ எம்3 ப்ரோ மாடலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பிரபல சியோமி நிறுவனமும் தனது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மடலை உலக சந்தையில் அறிமுகம் செய்தது.


POCO F3 GT 


புதிய போக்கோ ஸ்மார்ட் போன் 6.67 இன்ச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டது, மேலும் 1 பில்லியன் வண்ணங்கள் கொண்ட OLED -FHD டிஸ்ப்ளே கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஸ்கிரீனாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொடுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் 11 மற்றும் MIUI 12.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட் போன், மீடியாடெக் எம்.டி 6893 டிமென்சிட்டி சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போனில் தனியாக மெமரி கார்டு போடுவதற்கு ஸ்லாட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 






இருப்பினும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி RAM அதனைத் தொடர்ந்து 128 ஜிபி ஸ்டோரேஜ் 12 ஜிபி RAM மற்றும் 258 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி RAM என்று 4 மாடல்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவர உள்ளது. 64 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. 4K வீடியோ எடுக்க கூடிய வசதியும் இதில் உள்ளது, கைரேகை சென்சார் போனின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 67W Fast Charging kit இந்த போனுடன் கொடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. 5065 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போன் கருப்பு, க்ரே மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த கொரோனா தொற்று சூழலில் பல ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய புதிய மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இந்திய சந்தையில் பல போன்கள் அறிமுகமாகி வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் தங்களுடைய பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. சியோமி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பலதரப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. குறிப்பாக சியோமி நிறுவனம் தனது புதிய 11 லைட் மாடல் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.