கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய Paytm அப்ளிகேஷனில் புதிய அப்டேட் ஒன்று வரப்போவதாக அதன் தலைவர் விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.








இது குறித்த அவரது ட்வீட்டில், "இந்த புதிய அப்டேட்டின் வழியாக பயனாளர் இருக்கும் பகுதியில் தடுப்பூசி போடுவதற்கான ஸ்லாட்கள் இருந்தால் அவருக்கு Paytm தகவல் தெரியப்படுத்தும். உடனடியாக அவர் அந்த ஸ்லாட்டில் பதிவு செய்துகொள்ளலாம்’ எனப் பதிவிட்டிருந்தார். இதுவரை இந்தியாவில் 4.12 லட்சம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3980 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.   


 


Also Read: ஆதார் பூனவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் - மும்பை நீதிமன்றத்தில் மனு